பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிப்புரை 387



தலைமைப் பண்புகள் நிறைந்த தக்கோன் ஒருவனும் அவ்வியல்பேயுடைய நங்கை யொருத்தியும் தனிமையிற் கண்டு காதலுற்றுக் களவொழுக்கம் மேற்கொண்டுள்ளனர். விரைய வரைந்து கொள்ளாது, தலைமகன் களவின்பத்தையே விரும்பி யொழுகுவது அவளுக்கு வருத்தம் பயக்கின்றது. அதனைத் தோழி அறிகிறாள். வரைவு என்பது இன்னானுக்கு இன்னவள் உரியவள் என்று பெற்றோரும் சான்றோரும் கூடிப் பலரும் அறிய உறுதி செய்வது. அதன் பின்னரே கடிமணம் நடைபெறும். அதனைப் பழந்தமிழ் நூல்கள் வதுவை மணம் என்று குறிக்கின்றன. வடநூல் கூறும் காந்தருவ மணத்துக்கும் பலரும் அறிய நிகழ்த்தும் வதுவை மணம் நடந்தே தீர வேண்டுமென்ற கட்டுப்பாடு இல்லை, தமிழ்நூல் கூறும் களவுக்கு கற்புமணம் நடந்தே தீர வேண்டும்; அதன் பின்பே இருவரும் உடனுறைந்து செய்யும் மனையறம் தொடங்கும். வரைவு இடையீடு படுகிறபோதுதான் உடன்போக்கு நிகழும். அவ்வுடன் போக்கும் முடிவில் திருமணத்தால் தான் முற்றிக் கற்பு நெறியாகும் தனித்துக் கண்டு காதலுறும் வகையில் களவும் காந்தருவமும் ஒன்றாய்த் தோன்றுதல் பற்றிக் களவு காந்தருவம் போன்றது என்பர்; என்றாலும் முறையும் பயனும் வேறுபட்டுப் போவதால் களவு காந்தருவமென்றும், காந்தருவம் களவு என்றும் கருதவது குற்றம்.

மேலும், களவுக் காலத்தில் தன் உள்ளத்துக் காதலைப் பிறர்க்குத் தெரிவிப்பதில் ஆண்மகனுக்கு உரனும் வாய்ப்பும் உண்டு. பெண்மகளோ எனின்