பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிப்புரை 391


“கானற் கண்டல் கழன்றுகு பைங்காய்
நீனிற இருங்கழி உட்பட வீழ்ந்தென
உறுகால் தூக்கத் தூங்கி ஆம்பல்
சிறுவெண் காக்கை ஆவித் தன்ன
வெளிய விரியும் துறைவ”

என்று எடுத்துரைக்கின்றாள். “அயலார் அலர் தூற்றுவர் என்ற அச்சத்தால், இதுவரை நாணம் முதலிய பண்புகளால் வாய் திறவாதிருந்த இவள் இப்போது வாய்விட்டே புலம்பத் தொடங்கிவிட்டாள்” என்ற கருத்து இதன்கண் உள்ஸ்ரீத்தப்பட்டிருக்கிறது.

பிறிதொருகால், தோழி, அவனைக் கண்டு, தலைவியின் மேனி வேறுபட்டால் ஊரில் அலர் தோன்றிவிட்டது; இனி இது என்னாய் முடியுமோ என்பாளாயினாள். அப்போது அவள், தலைமகளை நோக்கி உரைக்கலுற்று,

“முடக்கால் இறவின் முடங்குபறப் பெருங்கிளை
புணரி இருதிரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதல் கவினே”[1]

என்று சொல்லுகின்றாள். “நுதல்கவின் இன்னது” என்றது, நினது நுதலழகு பசலையுற்றுப் பிறர் அலர் தூற்றுதற்கு ஏதுவாயிற்று என்பதாம்.

இவ் வண்ணம் தலைமகளும் தோழியும் அவ்வப் போது கூறிய வரைவுக் குறிப்புகள் அவர்களது காதல் அவத்தை எடுத்துக் காட்டவே, அவனும் சான்றோரைக்


  1. குறுந். 109.