பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46 சேர மன்னர் வரலாறு



நோக்கம் வரலாறு கூறுவதன்று; ஆயினும் அதன் பொருளிலக்கணப் பகுதி தமிழ் கூறும் நல்லுகத்து மக்களுடைய வாழ்க்கைக் கூறுகளைத் தொகுத்தும் விரித்தும் கூறுகின்றது. அந்நிலையில் அது சேர மன்னருடைய அடையாளப்பூ’ அவர்க்குச் செந்தமிழ் நாட்டின்பாலுள்ள உரிமை. முதலியவற்றைக் குறிப்பதோடு நின்றுவிடுகிறது.

இந் நூற்றொகுதிகளைக் காண்போமாயின், சங்க காலத்தில், ஏனைச் சோழ பாண்டிய நாடுகளைவிடச் சேர நாடு வடவாரியர் கூட்டுறவை மிகுதியாகப் பெற்றிருப்பது தெரிகிறது. அதனால், சேரர்களைப் பற்றிய குறிப்புகள் வடநூல்களில் காணப்படுதற்கு இடமுண்டு. வட நூல்களில் இருக்கு வேதமும் தைத்திரீயமும் வியாச பாரதமும் சேரர்களைச் சேரர் என்றே குறிக்கின்றன[1]. மேலும் இருக்கு வேதத்தின்கண் “ப்ரஜா: திஸ்ரோ அத்யாயம் அயூஹ்”[2] என்பதற்குப் பொருளுரைக்கும் தைத்திரீய ஆரண்யகம், “யாவைத்தா இமாஹ் பர்ஜா: திஸ்ரோ அத்யாயம் ஆயம்தானி இமானி வாயாம்ஸி வங்கவாகதா: சேரபாதா:[3] என்று உரைத்தது. இதற்கு உரைகூறிய சாயனாசாரியர், வாயாம்ஸி யென்றது பறவைகளென்றும், வங்கவாகதா என்றது மரஞ்செடிகளென்றும், சேரபாதா: என்றது பாம்புகளென்றும் உரைத்தார். ஆனந்த தீர்த்தரென்பார் இம் மூன்றும் முறையே பிசாசர், இராக்கதர், அசுரர் என்ற மூவரையும் குறிக்குமென்றார். கீத் (Keith) என்னும்


  1. P.T.S: Iyengar’s History of the Tamils P. 29, 328;
  2. R.V. vii. 101: 14;
  3. Tit. Arany. ii. 1.1.