பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரநாட்டின் தொன்மை 49



பேரூரில் வாழ்ந்த பிராமணர்களை வருவித்து ஊர்க்கொருவராக நால்வரைத் தேர்ந்து அவர்களை அரசியலை நடத்துமாறு பரசுராமன் ஏற்படுத்திச் சென்றான். நால்வருள் ஒருவன் தலைவனாதல் வேண்டும் மெனவும், அவனும் மூன்று ஆண்டுக்கு மேல் தலைமை தாங்குதல் கூடாதெந்றும் அவர்கள் தங்களுக்குள் வகைமை செய்து கொண்டனர். அரசியலுக்கு ஆறிலொன்று கடமையாக வரையறுக்கப்பட்டது.

காலம் செல்லச் செல்ல வேலியே பயிரை மேயத் தலைப்பட்ட தென்றாற்போல் இத் தலைவர்கள் மக்கட்கு இன்னல் விளைக்கலுற்றனர். இக் கொடுமை நீங்க வேண்டி அந்தப் பிராமணர்கள் தங்கட்கு அரசியல் தலைவனாகிறவன் தங்கள் நாட்டவனாக இருத்தல் கூடாதென்று துணிந்தனர். கோபுரம் என்னும் இடத்திலிருந்து ஒருவனைத் தேர்ந்து கேய பெருமாள் என்று சிறப்புப் பெயர் நல்கித் தங்கட்குப் பன்னிரண்டாண்டு வேந்தனாக இருக்குமாறு ஏற்பாடு செய்தனர். அவனுக்கு முடிசூட்டும் போது சேரமான் பெருமாள் என்று பெயர் கூறப்படும். கேய பெருமாட்டுப் பின் சோழன் பெருமாளும் அவற்குப்பின் பாண்டி நாட்டுக் குலசேகரனான பாண்டிப் பெருமாளும் ஆட்சி செய்தனர்.

கேய பெருமாள் கொடுங்கோளூரிலிருந்து பன்னிரண்டாண்டு ஆட்சி செய்தான்; தலையூரில் கோட்டை யொன்றையும் அவன் கட்டினான். பின் வந்த சோழப் பெருமாள் பத்தாண்டு இரு திங்களும் இருந்துவிட்டுப் பழையபடியே சோழநாடு சென்று சேர்ந்தான்; அவன்