பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 சேர மன்னர் வரலாறு



மேலும், இடைக்காலத்தில் இருந்து ஆராய்ச்சி நிகழ்த்தியோரினும், இக் காலத்து ஆராய்ச்சியாளருக்குக் கருவிகள் விரிவாகக் கிடைத்துள்ளன. நிலவுலகத்தில் ஆங்காங்கு வாழும் மக்களுடைய தொன்மையும் வரலாறும் வழக்காறும் அறிந்து கொள்ளத்தக்க வகையில் நூல்கள் வந்துள்ளன. இலக்கிய நூல்கட்குத் துணை யாகப் பல்லாயிரக் கணக்கில் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியுரை களும் பெருகக் கிடைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் உண்மையெனக் காணப்பட்ட வொன்று பிறிதொரு காலத்தில் தவறுபடுவதும், தவறெனக் கருதியதொன்று உண்மையாவதும், ஒருகாலத்தில் எல்லையென வரம்பிட்ட ஒன்று பிறிதொரு காலத்தல் மாறுவதும், புது வரம்பொன்று காணப்படுவதும் ஆராய்ச்சி நெறியில் இயற்கையாய்விட்டன. அதனால், ஆராய்ச்சியாளர் உண்மையைக் கடைப்பிடித்துத் தமக்குக் கிடைக்கும் கருவிகளைக் கொண்டு அச்சம் இன்றித் தமது ஆராய்ச் சியை நிகழ்த்தத் தலைப்பட்டுவிட்டனர், அறிவியல் நெறியிலேயே வரம்பறுக்கப்பட்ட உண்மைகள் பல போலியாய் ஒழிகின்றன எனின், வரலாற்றாராய்ச்சிக்கு வேறு கூறுவது மிகையன்றோ!

இந் நெறியே நின்று நோக்கும்போது, மேனாட்டு யவனர்களும் வடநாட்டு வட நூல்களும் கூறுவனவற்றால், சேரரது தொன்மை வேதகாலத்தேயே விளங்கி யிருந்தமை தெளிவாயிற்று. சங்க இலக்கியங்களுள் சேரர்கள் சார்பாக நிற்கும் பாட்டுகளிற் காணப்படும். ஊர்களும் நிகழ்ச்சிகளும் சிரேக்க யவனர் குறிப்புக்