பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரநாட்டின் தொன்மை 67


களிலும் ஒப்பக் காணப்பெறுகின்றன. அக் குறிப்புக்களின் காலம் கி.பி. முதலிரண்டு நூற்றாண்டில் நிலைபெறுகிறது. அவற்றுட் சில, சங்க இலக்கியங்களில் காணப்படாத குறிப்புகளை உணர்த்துமாற்றால், காலத்தால் சங்கவிலக்கியங்கட்குப் பிற்படுகின்றன. படவே, சங்க இலக்கியங்கள் கி.பி. முதல் நூற்றாண்டிற்குப் பிற்பட்டனவல்ல என்பது உறுதியாகிறது. கே.ஜி. சேஷையர் முதலியோர் சேர வேந்தர்களைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முடிய இருந்தனரென்று கூறுகின்றனர்; அவர் கூறுவன வேறு வகையால் நிறுவப் பட்டமையால், சங்க இலக்கியங்களில் கீழெல்லை கி.பி. முதல் நூற்றாண்டென்று கொள்வதே தக்கது.


3. சேரர்கள்

சேர நாட்டில் வாழ்ந்த மக்கள் சேர நாட்டுச் செந்தமிழ் மக்களாவர். பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் வாழ்ந்த மக்களைத் தமிழர் என்பது மரபாதலின், அம் மரபின்படியே சேர நாட்டவர் செந்தமிழ் மக்களாகின்றனர், பாண்டி நாட்டுத் தமிழர்க்குப் பாண்டியரும், சோழ நாட்டுத் தமிழர்க்குச் சோழரும் வேந்தராயினது போலச் சேரநாட்டுத் தமிழ்மக்கட்குச் சேரர் வேந்தராவர். இந்நாட்டுக்குக் கிழக்கெல்லையாகச் சுவர்போல் தொடர்ந்து நிற்கும் மலை மேலைமலைத்தொடர். இது தெற்கே பொதியமலை முதல் வடக்கே தபதியாற்றங்கரை வரையில் நிற்கிறது. இந்நெடுமலைத்தொடர் வடவர்களால் சஃயாத்திரி யென்று பெயர் கூறப்படுகிறது; சஃயம் - தொடர்பு; அத்திரி - மலை.