பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 சேர மன்னர் வரலாறு



வரலாறு போல இவரது வரலாறு எளிதிற் காணவியலாமல் இருப்பதற்கு இந்நிலையும் ஓர் ஏதுவாகும். அப்பெயர்களுள், வான வரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ , பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை என்பன சிறப்புடையனவாம். சேரலர், சேரல், சேரமான் என்பன பொதுப்பெயர்.

“வென்றி நல்வேல் வான வரம்பன் [1]
“வான வரம்பனை நீயோ பெரும்[2]
“தேனிமிர் நறுந்தார் வானவன்[3]
“பெரும்படைக் குதிரை நற்போர் வானவன் [4]
“வெல்போர் வானவன் கொல்லிக் குடவரைகள் [5]
“வசையில் வெம்போர் வானவன் [6]
“சினமிகு தானை வானவன் [7]
“மாண்வினை நெடுந்தேர் வானவன் [8]
“வில்கெழு தடக்கை வெல்போர் வானவன் [9]

என வருவன வானவன், வானவரம்பன் என்ற பெயர்கள் பண்டை நாளைச் சான்றோர்களால் பெரிதும் விதந்து கூறப்படுவதை எடுத்துக் காட்டுகின்றன.

இந்த வானவன் என்ற பெயர் பொருளாக ஆராய்ச்சி செய்த அறிஞர்கள், “இதுவரை வானவர் என்ற பெயரால் பண்டை இவ்வமிசம் தெய்வ சம்பந்தம்