பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 சேர மன்னர் வரலாறு



சேரரும் சேரலர் என்றும் சேரல் என்றும் கூறப்படுவாராயினர். கடல் சேர்ந்த நிலத்தைச் சேர்ப் பென்றும், அந் நிலத்துத் தலைவர்களைச் சேர்ப்ப ரென்றும் கூறுவது தமிழ் நூல் வழக்கு. அவ் வழியே நோக்கின் சேரநாடும் தொடக்கத்தில் சேர்ப்பு நாடென் விளங்கிப் பின் சேர நாடெனத் திரிந்துவிட்டது. சேர்ப்பர் சேரராயினர்[1] சேரலர் என்ற பழம் பெயர் பிறநாட்டு மக்களால் கேரளர் என வழங்கப்பட்டது; அதனால் சேரலர் நாடு அவர்களால் கேரள நாடாகக் கூறப்படுவதாயிற்று.

இடைக்காலத்தே தோன்றிய கல்வெட்டுகள் பலவும் சேரநாட்டை மலைநாடு எனவும் மலை மண்டலம் எனவும் குறிக்கின்றன. அது வழியே நோக்கின், மலைநாடு, மலைவள நாடு எனவும் மலைப்பால் நாடெனவும் கூறப்படும் இயையு பெறுவதாயிற்று. அப் பெயர்கள் பின்னர் வேற்று மொழியாளரால் மலையாளம் என்றும் மலபார் என்றும் சிதைந்து வழங்கப்படுவவாயின. ஆதலால், அந் நாட்டவர் மலையாளிகளாயினர்; அவரது மொழி மலையாளமாயிற்று[2].

இச் சேர நாட்டுப் பகுதியில் குட்ட நாடே ஏனைப் பொறைநாடு, பூழிநாடு, குடநாடு முதலியவற்றை நோக்க மிக்க வளம் பொருந்தியது என்பது நாடறிந்த செய்தி. நிலவளம் மிக்க இடத்தே மக்கள் உடல் வளமும் அறிவு


  1. சேர்ப்புத்தலை சேர்த்தலை எனவும், சேர்ப்புவாய் சேர்த்துவாய் எனவும் வழங்குவது காண்க.
  2. இதனை நினையாமையால் கால்டுவெல் முதலியோர் வேறு கூறினர்.