பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரர்கள் 85



வளமும் பெருசிச் சிறப்பர் என்பது நிலநூன் முடிபு. அதனால் தொடக்கத்தில் சேரவரசு குட்ட நாட்டில் தான் உருக்கொண்டு சிறந்ததென்பது தெளிவாம். சேர வேந்தர்க்கு உரியதெனப் பேசப்படும் வஞ்சிநகர் இக் குட்ட நாட்டில் இருப்பதே இதற்குப் போதிய சான்று. ஆகவே, சேர வேந்தருட் பழையோர் குட்ட நாட்டவர் என்று அறியலாம். மலையாளம் மாவட்டத்திலுள்ள ஏர்நாடு தாலூகாவில் சேர நாடு என்ற பெயருடைய சிறுநாடு ஒன்று காணப்படுகிறது. இது குட்ட நாட்டை அடுத்து வடக்கில் கடற்கரையைச் சார்ந்திருப்பதால், குட்டநாட்டுச் சேரர் தாங்கள் நாட்டை விரிவு செய்த போது தொடக்கத்தில் கொண்டது இப் பகுதி யென்பதும், குறும்பர் நாடு தாலூகாவிலுள்ள வடகரை யென்னும் நகரையும், அதனருகே ஓடிக் கடலோடு கலக்கும் சேர வாற்றையும், சேரபுரம் என்னும் பேரூரையும் காணுங்கால், சேர நாடு பின்பு இவ் வடகரை வரையிற் பரவிற்றென்பது, முடிவில், வட கன்னடம் மாவட்டத்திலுள்ள வானியாறும் சேரவாறும் இன்றுகாறும் நின்று விளங்குவதால், சேரநாடு முடிவாகப் பரந்து நின்றது அப்பகுதி வரையில் என்பதும் உய்த்துணரப்படும். இத்துணைப் பரப்புக்கும் தோற்றுவாய் குட்டநாடு என்பது நினைவு கூரத்தக்கது.

இவ்வாறு சேரநாடு படிப்படியாகப் பரந்து பெருகியது காட்டும் குறிப்புகள் ஊர்ப் பெயராகவும் ஆறுகளின் பெயராகவும், மலை குன்றுகளின் பெயராகவுமே உள்ளன. வரலாறு கூறும் கருத்துடைய நூல்களும் பாட்டுகளும் நமக்குக் கிடைக்காமையின்,