பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 சேர மன்னர் வரலாறு



இப் பெயர்களை ஆராய வேண்டிய நிலைமை யுண்டாகிறது. கிடைத்துள்ள சங்கத் தொகை நூற் பாட்டு களில் இலைமறை காய் போல் காணப்படும் சொற் குறிப்புகளும் ஓரளவு துணை செய்கின்றன. அவ் வகையில் சேர மன்னர் சிலர் பதிற்றுப்பத்திலும் புறநானூற்றிலும் பிற தொகை நூல்களிலும் காணப் படுகின்றனர். அவருள் உதியஞ்சேரல் என்பவனும் அவன் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல் யானைச் செல்கெழு குட்டுவனும் அவர் வழிவந் தோரும் முதற்கண் காணப்படுகின்றனர். அவர்களை முறையே காண்போம்.


4. பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்

குட்டநாட்டு வஞ்சி நகரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்ட வேந்தர்களுள் மிகவும் பழையோனாக இவ்வுதியன் சேரலாதன் காணப்படு கின்றன. புறநானூறு இவனைப் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்று குறிக்கின்றது. சேரலாதன் என்பதைப் பொதுவாகக் கொண்டு, பெருஞ்சேரலாதன், நெடுஞ்சேர லாதன் என்று பெயர் தாங்கியோர் பலர் உள்ளனர். அது நோக்க, சேரலாதன் என்பது சேர வேந்தர் குடிப்பெயர் என்று தெளியக் காணப்படும். சேரல் ஆதன் என்பது சேர வேந்தனான ஆதன் என்று பொருள்படுகிறது. படவே, சேரலாதன் என்ற பெயருடையோர், சேரமான் ஆதன் என்பான் வழி வந்தவர் என்பது இனிது விளங்கும். இச் சேர மானும் உதியன் சேரலாதன் எனப்படுவதால்