பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் 89



மொழி. மகட்கொடை புரிந்த வேளிர் தம் மகளது வாழ்வு குறித்து அவர்களை மணந்து கொண்ட முடி வேந்தர்க்குத் தக்க பெருந்துணைவராய் இருந்தனர்.

மகட்கோள் முறையால் வேணாட்டவரோடும், வானவாசி, நாட்டவரோடும் வரம்பறுத்துக் கொண்ட வகையால், வானவாசிகளோடு முரண் கெடுத்து இனிய அரசுமுறை நடத்திவந்த சேரவேந்தர்க்குத் தாம் வாழ்ந்த நாட்டிடம் “சிறிது” என்ற உணர்வு தோன்றி அவர்கள் உள்ளத்தை அலைத்துக்கொண்டிருந்தது. உதியஞ்சேரல் காலத்தில் தென்பாண்டி நாட்டையாண்ட வேந்தர் செவ்விய அரசுபுரியும் திறமிலராக இருந்தனர். வேணாட்டு வேளிர்கள் தனக்குரியராய் இருந்தமையின், அவர் நாட்டுக்குத் தெற்கிலுள்ள தென்பாண்டி நாட்டைத் தன் நாட்டோடு சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற வேட்கை சேரமானுக்கு உண்டாயிற்று. அதனை நிறைவேற்றிக் கோடற்குரிய செவ்வி தோன்றியதும் உதியஞ்சேரல் தென்குமரியைச் சூழ்ந்திருந்த தென்பாண்டி நாட்டை வென்று தென்கடற் கொடியைத் தன்னாட்டுக்கு எல்லையாகக் கொண்டான். அந் நாட்டுக் கீழ் கடற்கரையும் சேரர்க்குரிய தாயிற்று. இதனால் சான்றோர் இவனை, “நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்[1]” என்று பாராட்டினர். இச் செய்தியை நினைவிற் கொண்டே பின் பொருகால் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடப் புக்குந்த கபிலர், “இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,


  1. அகம் 65.