பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 சேர மன்னர் வரலாறு



அறிஞர் வேறு கூறுவர்: “கோதுமை உண்ணும் கூட்டத் தவரான பாண்டவ கெளரவர்கட்கு நெற்சோறுண்டு தென்னாட்டுப்பகுதிகள் ஒன்றில் வாழும் வேந்த னொருவன் சோறு கொடுத்தான் என்பது சிறிதும் ஒவ்வாவுரை; கெளரவர் இறந்தது குறித்துச் செய்த விழாவில் பேரெண்ணினரான மக்கட்கு இவ்வுதியன் பெருஞ்சோறளித்தான் என்று கொள்வதே பொருத்த மானது; இவ்விழா, பாரத வீரர்கட்குச் சிரார்த்தமாகவோ பாரதக் கதையை நடித்த நாடகத்தின் இறுதி விழாவாகவோ இருத்தல் வேண்டும்.

“சேரநாடு நெடுங்காலமாகக் கதகளி யென்னும் கூத்துக்குப் பெயர்போனது; பாட்டும் உரையுமின்றி அவிநயத்தால் உள்ளக்கருத்தை யுணர்த்துவது இதன் இயல்பு; இத்தகைய கதகளி யொன்றின் இறுதி விழாவாக இப்பெருஞ்சோறளிக்கப்பட்டதாம். இது போலும் கூத்துகள் தமிழ் நாட்டில் நடைபெறுவது வழக்கம்; செயற்கரும் செயல் செய்த வீரர் வரலாறுகளை நடித்துக் காட்டும் இக்கூத்துவகை தமிழ்நாட்டின் தொன்மை வழக்காதலின் இவற்றைப் பட்டவர்குறி என்றும் கூறுவ துண்டு. இதனைக் கம்ப சேவை என்றும், கம்பக்கூத் தென்றும், இக் கூத்தாடுபவரைக் கம்பஞ்சேய்மாக்கள் என்றும் கூறுவர். அக்கம்ப சேவையிற் கலந்தாடும் உழவர்கட்கு, உடையோர் பெருஞ்சோறளித்துப் பெருமை செய்வர்.

“பண்டைத் தமிழ் வேந்தர்களின் புகழ்வினை மாண்புகளை வாய்த்தவிடத்து உவமமாகவும் பொரு ளாகவும் பாடிய நல்லிசைச் சான்றோருள், இளங்