பக்கம்:சேரர் தாயமுறை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சேராதாயழறை. சரித்திரசம்பந்தமான மாதாந்தப்பத்திரிகைகளில் வெளியிட்டுப் புலர்க்கும் உபகாரமாம்படி செய்ய வேண்டுமென வற்புறுத்தினேன். பின்னர் அதனைத் தமிழ்ப்படுத்கிச் செந்தமிழ்ப்பத்திரிகையில் வெளி பிட்டார்கள். இங்கே கூறியபடி எனக்கும் இந்நூலுக்கும் ஒருசிறு தொடர்பு இருக்தல்பற்றியே, பாரதியாரவர்களின் வேண்டுகோளின் படி ஓர் முன்னுரை எழுதுதற்கு யான் மனமுவந்து இணங்கினேன், பழந்தமிழ்க்குடிகளுள் ஒருசாராராகிய சேரமரபினருள் எவ்வகையான தாயக்கிரமம் அமைந்திருந்த சென்று ஆராய்ந்து தெளி வதே இந்நூலின் நோக்கம். இந்தற்பொருளாகிய தாயவழக்கு பண்டைக்காலக் கமிழ்ச்சமூகாயத்திற்கு அஸ்திவாரம் போன்றது. தமிழ்மக்களது சர்வசரித்திர விளக்கத்திற்கு மிக இன்றியமையாதது. ஆதலால் இக்காலின் கண் ஆராய்ச்சிக் கொத்துக்கொண்ட பொருகள் மிக மிக முக்கியமானதாகும். இதுவரை, தமிழ் அறிஞர்களும் தமிழ் நாட்டுச் சரித்திர அறிஞர்களும் ஆராய்ந்து வந்த பொருள்களில் இந்தத் பொருளைக் காட்டினும் சிறந்ததொன்றைக் காணுதல் அரிதாம். இதனை வாசகர்கள் நன்குணர்தல்வேண்டும். இந்நூல் தோன்றுவதற்கு முன்புகாரின, இப்பொருளைக் குறித்துத் தமிழாராய்ச்சியாளர்கள் கவனம் செலுக்தியிருந்தார்கள். ஸ்ரீமான் மு. இராகவையங்காரவர்கள் சேரன் செங்குட்வேன் என்னும் நாலில் பாரதியாரவர்களது கொள்கையொடு மாறுபட்ட மக்கட்டாயக்கொள்கையை வற்புறுத்தி எழுதியிருந்தார்கள். காலஞ் சென்ற ஸ்ரீமான் எம் ஸ்ரீநிவாஸ் இயங்காரவர்கள் தமது தமிழாராய்ச்சியுரைகளில் (Tamil studies) பாரதியாரவர்களது கொள் கையை ஒருவாறாக முற்படவுணர்த்து எழுதியிருக்கிறார்கள். ஆனால் பாரதியாரவர்கள் எழுதியதன் பின்னரே இப்பொருள் தமிழ்மக்களது பூர்வசரித்திரவுணர்ச்சிக்கு எத்தனை யின்றியமையாததென்பது அறிஞர்களால் நன்குணரப்பட்டது. இவ்வுணர்ச்சி தோன்றுதற்கும் பல அறிஞர்களும் பலபடியாக இப்பொருளை ஆராய்கற்கும் பாரதி யாரவர்களே முக்கியகாரணராயுள்ளார்கள், பாரதியாரவர்கனே இப் பொருளின் சரித்திரகௌரவத்தை நாபானவரும் நன்குணரும்படி செய்தவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/22&oldid=1444761" இலிருந்து மீள்விக்கப்பட்டது