பக்கம்:சேரர் தாயமுறை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வ சேரர்தாயமுறை. பகுதி க. முன்னுரை கழிந்த இந்து நாற்றண்டுகளுக்கு மேலாகக் கோளத்திற்.. வகுப்பார் பெண்வழியில் மருமக்கட்டாயமுறை பேணுவதைக் காலு கின்றோம். நாம் அறிய இவ்வழக்கம் தாயர் பெருமக்களிடைமட்டு மில்லை; தென் திருவாங்கூரில் நாஞ்சில்நாட்டு வேளாளர் முதல் AI:மலையாளத்தில் மகம்மதிய மாப்பிள்ளை மாரும், பொய்யானூர்க்கம் துப் பார்ப்பன தம்பூரிகளும், தென்கன்னடத் தொன்மக்கள் பலரும், துளுவர் கொங்கணர் சிலரும் இத்தாய்வழித்தாய முறையையே நெடு நாளாகக் கையாண்டுவருகின்றனர். இவ் வழக்கமுடையாரெல்லாரும் குட மலைக்குமேற்கே பண்டைச் சேரநாட்டின் பகுதிகளான மேலைக் கடற்கரைநாடுகளிலே இருப்பதாகவும் அறிகின்றோம். பார்போசா, சோனரத்து முதலிய பரோப்பிய யாத்திரிகர் மேலமலைத் தொடருக்கு மேற்குநிலமக்கள் பலர்தம்முள் பிறிதிடத்திற் காணரிய இப் பெண் வழித்தாயம் பெரிதும் வழங்கப்பெறுவதைக் கவனித்துத் தம் யாத் திரைக்குறிப்புக்களில் இவ்வதிசயச்செய்தியை எழுதியிருக்கின்றனர். கோளவழக்கத்தை நாம் அறிவோம். எனினும், இது புதி தாசுக் குடபுலத்தில் எப்படியோ வந்தேறிநடக்கும் ஒரு இடைக்கால வழக்கமெனக்கொண்டு வாளா அமைகின்றோம். சேரநாடு தமிழகத் தின்பகுதியென்றும், சோர்பரம்பரையிலும் மற்றைத் தமிழ்வேந்தர் குடிமரபாம் மக்கட்டாயமே பண்டைநாளில் அடிப்பட்ட பழவழக் காய் ஆட்சிபெற்றிருந்ததென்றும் நாம் நம்புகின்றோம். எப்படியானா லும் சங்ககாலத்துக்கு நெடியபல நூற்றாண்டுகளுக்குப்பின்னரே சேர நாட்டில் மருமக்கட்டாயமுறை புதுவழக்காய்ப் புகுத் திருக்க வேண்டு மெனக் கொள்கின்றோம். அப்படி நாம்கொள்வதால் அதன் உண்மை பினை எகாத்தளவும் ஆசாய்தற்கு அலசியம் நாம் காணகில்லோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/25&oldid=1444764" இலிருந்து மீள்விக்கப்பட்டது