பக்கம்:சேரர் தாயமுறை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொர்தாயழறை. 'வேண்மாள்' எனும் பெண்பாற்பெயர் தொடருங்கால் என்னன் தேவி, உதியன் தேவி என்றே பொருள்படும். அல்லாக்கால் இப் பெயர்த்தொடர்கள் பொருளற்ற சொல்லின் வெறுங்கூட்டமாகும். இத்தெளிவுகண்டே மஹாமஹோபாத்தியாய சாமிநாதையரவர்களும் தம் அரும்பத அகராதியில் வேண்மான்' என்பதற்குச் சிற்றரசன் எனவும், 'வேண்மாள்' என்பகற்குச் சிற்றரசன் மனைவி - முடியுடை பரசன் மனைவி எனவும பொருள் குறித்துள்ளார்கள். இவ்வாறு வேண்மாள்' எனும் சொல் கோவேந்தர் குறுமன்னர்மனைவியர்க்குப் பொதுப்பெயராக வழங்குவதால், அது ஒருவருக்கும் இயற்பெய மாகாமல் சிறப்பு முறை குறிக்கவரும் பொதுப்பெயரேயாதல் வேண்டும் என்பது ஐயமற்ற துணிபாய்க் கொள்ளக்கிடக்கின்றது. (5) வேண்மாள் என்பது இயற்பெயராமேல் பிறிதுசொற் சார்பு வேண்டாமல் தன்னிலையில் நின்று அந்தப்பெயருடைய பெண் மகளைச் சுட்டல் கூடும். இவ்வாறு தனிவழக்கு இக்கிளவிக்கு எங்கு மில்லை. வருமிடங்கள் தோறும் இது ஆண்பாற்சொற்கள் பிறவற் றைக் தழுவியேவாக் கானுகின்றோம். ஆண்பாற்பெயரொடு காளா தொடருங்கால் அவ்வாண்மகனுக்குத் தொடர்புடைப்பெண் ணொருத்தியைச் சுட்டும் ஒரு சிரிப்புமுறைப்பெயராவதன்றி, தொடர்புசட்டவேண்டாத இயற்பெயராய்க்கொள்ளுவது பொருக் தாது, பொருள் தாராது. (6) ஆண் பெயரொடு பெண்ணொருத்தியினியற்பெயரைப் புணர்க்குங்கால், அவ்விருவருக்கும் உள்ளதொரு முறைகுறிக்கும் சொற்பெய்து விளக்குவதே மரபாகும். இராமன்தேவி சீதை, இராமன் தாய் கோசலை, இராமன்மைத்துனி ஊர்மிளை என்று ஒரு முறைப்பெயர்த்தொடர்புகொண்டே இருபாலார் இயற்பெயர்த் தொடர்கள் வழங்கப்பெறும். முறைசுட்டாமல் வாளா இராமன் கணர் பிளை என்று இரண்டு இயற்பெயர்களைத் தொடுத்தால் ஒரு பொருளு மறியாமல் மருளுதற்கே எதுவாகும். அக்தகைய பிரயோகம் வழக்கா றில்லை; மரபிறந்த தவறுமாகும். . (7) ஈண்டு இரண்டு ஒன்பது பதிகப்பாட்டுக்களில் 'வேளியன்வேண்மாள்' (கிழாஅன்-வேண்மாள்' என்று ஆண்பெயர்களோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/38&oldid=1444777" இலிருந்து மீள்விக்கப்பட்டது