பக்கம்:சேரர் தாயமுறை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சேரர்தரய்ழறை, தொடர்ந்து பிறசொற்சார்பின்றிநிற்றலால், வெளியன் கிழா அன் இல் விருவருக்கும் தனித் தனியே ஒருதொடர்புடைய பெண்களுக்கு “வேண்மாட்” சொல் முறைப்பெயராயமைவது அங்கையில் செல்லி போல் தெளியப்படும். மற்றைய 4, 6,8 பதிகங்களில் பதுமன்தேவி' 'ஆவிக்கோமான்தேவி' என்றிருப்பதேபோல், ஈண்டும் 'வெளியன் வேண்மாள்' 'கிழாஅன்வேண்மாள்' எனலே வருவகால், தேவிப் பொருளிலேயே வேண்மாட்சொல்லும் நிற்கிறதென்று ஒருதலையாகத் துணியப்படும். (8) இனி, முறைப்பெயராய்க்கொண்டாலும், இதற்கு மனை விப்பொருளைக் கொடுப்பானேன், மகட்பொருளிலேயே இதைக் கொள்ளு வோமென்பார்க்குச் சொல்லுவேம். மகள் என்னும் பொரு ளில் இச்சொல்லைக் கொள்ளற்கில்லை. தம் தமையன் செங்குட்டுவன் தேவியை இளங்கோவடிகள் வேண்மாள் என்று உரைப்பதாலும், மகட்பொருளில் யாண்டும் இதற்கு ஆட்சியில்லாததாலும் மனைவி யையே வேண்மாட்சொல் குறிப்பதாகும். (9) பதிற்றுப்பத்தின் பதிகங்களைச் செய்தவர் ஒருவரே என்பது அப்பதிக இயல்பாற் புலப்படுவதாகும். திரு. மு. இராகவையங்கா ரவர்கள் போன்ற பண்டிதரும் அப்படியே கொள்ளுகின்றார்கள். இஃது எப்படியிருப்பினும், இந்நூலில் ஐந்தொழியப் பிறபதிகங் களிலெல்லாம் ஆசிரியர் ஆண்பாற்சொற்களோடு 'தேவி' 'வேண் மாள்' என்ற சொற்களை நிறுத்தி, அவை கொண்டே அங்குக் குறித்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள முறையை விளக்கிப்போவத னால், இச்சொற்களிரண்டுமே 'மனைவி' என்னும் ஒருபொருளில் முறைப்பெயராய்வருமாறு தெளிபக்கிடக்கின்றது. இவ்வமைப்பால் 'தேவி' 'வேண்மாள்' என்ற இருசொல்லும், ஒருநிலையில் ஒன்றை யொன்று விளக்கி, இரண்டிற்கும் மனைவி எனும் ஒரேமுறைப்பொரு ரூண்மையை வலியுறுத்தும். சுருங்கச்சொல்லின், வேண்மாள் என் பது வேண்மானின் பெண்பாலாம். வேண்மான் என்னுஞ் சொல் சிற்றரசரான வேளிர் அல்லது குறுமன்னருக்குப் பொறுப்பெயர் என்று அறிவோம். ஆகவே வேண்மாள் என்பது குதமன்னா தேவியர்க்குப் பொதுப் பெயராய், கோவேந்தர்மனை வியர்க்கும் சில இடத்தே முறைப்பெயராய் வழங்குமென அறியலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/39&oldid=1444778" இலிருந்து மீள்விக்கப்பட்டது