பக்கம்:சேரர் தாயமுறை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொர்தாயமுறை. பொறையன் பெருந்தேவி' எனும் தொடர் கொண்டு பொறை பனை இவளுக்குத் தந்தை எனக் கொள்ளக்கூடுமாயின், 'ஒரு தந்தை' என்றதற்குப் பொறையனாகிய ஒருதக்னத" என்று இவர்கள் பொருள் கூறியிருக்க வேண்டும். அதைவிட்டுப் 'பொறையன் தேவி யின் பிதா' என்று பொருளுரைக்கமாட்டார்கள். அவ்வாறு இவர்கள் பொருள்கொண்டிருப்பதால், 'தேவி' என்ற சொல்லுக்கு மகள் என் னும் பொருள் இவர்களுக்கு ஒவ்வாமையும், மனைவி என்ற பொருளே இவர்களுக்கு உடன்பாடும் ஆவதனை அறிகின்றோம். ஆகவே, கடுங் கோவின் தாய், வேண்மான் பொறையலுக்கு மனைவியும், அக்காவன் தந்தைக்கு மகளுமே ஆவளென இப்பதிகத்தொடரால் தெரிகிறோம், அன்றியும், இத்தகைய ஐயம் எதுவுமே நிகழாவண்ணம் நிறுத்த சொற்பெய்து புலவர் இதன் மெய்ப்பொருளை விளக்கிவைத்திருக்கி றார். அந்துவன் தந்தைக்குக் கடுங்கோவின் தாய் மகள் என முதலிற் கூறினார். 'மகள்' எனும் சொல்லுக்கு மனைவி, பெண், நயை எனப் பலபொருள் உண்மையால், பிற பொருந்தாப்பொருள்களை விலக்கி இவள் அவனுக்குக் காயை என்பதைத் தெளிவிப்பதற்கு மகளுக்கு முன் 'ஒரு கந்தையீன்ற' என்ற அடை கொடுத்தார். எனவே இவன் அந்துவன் தந்தைக்கு மனைவியல்லன், அவன் பெற்ற தாயையேயாவள் - என்பது மலையிலக்காகிறது. இனி, மகட்சொற்போலவே, தமிழில் மகன் 6ானு மொழியும் ஆண்மகன், கணவன், வழித்தோன் றலாம் மருமான், புதல்வன் எனப் பலபொருள்களில் வரும். ஆதலால் இத்தொடரிறுதியில் 'பொறை யன் பெருந்தேவி யீன்றமகன்' என்றவிடத்தில் 'மகன்' என்ற சொல் லுக்குப் பொருளென்னை? இவ்விடத் திச்சொல்லின் பொருக்த மென்ன?--என்பன சிந்திக்கத்தக்கனவாம். அந்துவன் பெற்ற புதல்வியாய்ப் பொறையனை மணந்த தேலி யீன்ற கடுங்கோ, தன் தாயை மணந்த பொறையனுக்குப் புதல்வனும், தன் மாதுலனான அந்துவனுக்கு வழித்தோன்றலான மருமானுமாவன். இவ் வீரியை பையும் விளக்க மகன் என்னு மொருசொல்லே அமைவுடையதாத லின், இப்பதிகப்புலவர் ஈண்டு அச்சொல்லைப் பெய்து வைத்தார். இதனை இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் விசதமாக ஆராய்வதால் ஈண்டு விரியா திம்மட்டில் நிறுத்துகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/43&oldid=1444783" இலிருந்து மீள்விக்கப்பட்டது