பக்கம்:சேரர் தாயமுறை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொர்தாயமுறை அப்படியே இவன் பெற்ற மகன் அந்துவற்குத் தாயனல்லன், மருகனேயாவ னென்று தெளிவிப்பதற்காகப் புலவர் மீண்டும் இவ காப் பொறையன்தேவி' என்று விசேடித்து, 'ஒரு தந்தை யீன்ற மகள்' என்பதற்கும். (இவள்) ஈன்றமகன்' என்பதற்கும் இடையே விசேடணம் (அடை கொடுத்துப் பிரித்து நிறுத்துகின்றார். இவ்வாறு அந்துவன், பொறையன், கடுங்கோ ஆகிய மூவருக்கும் இவருக்கும் உள்ள முறை நிரல்நிறையே தெளிக்கப்படுகின்றது. இவள் முதல்ல ஐக்குச் சோதரி, நடுவனுக்கு மனைவி, கடையனுக்குக் தாய் என்பது வெள்ளிடை மலையாம். எப்படியும் இக்கொடயால் அந்துவனுக்குக் கடுங்கோவின் தாய் மனைவியாதல் இயலாதென்பது ஒருதலை, எனவே, அவனுக்கு இவன் தாயனாகான், வழித்தோன்றலான பருமாவேயாக வேண்டுமென்பது தெளியக்கிடக்கின்றது. பருமக்கட்டாயத்தைச் சுட்டுஞ் சான்று இதைவிட வேறு எப்படிக் காண முடியும். இத் தொடர் மக்கட்டாயத் தோடமைபெற மறுக்கின்றது. கடுங்கோவை அந்துவனுக்கு மகன் என்று கொள்ள இத்தொடர் எவ்வாற்றானும் இடந்தரவில்லை: மருகனெனும் ஒரு பொருளே இத்தொடருக்கு ஒருதலையாய் அமைந்த பொருளென்பதை இக்கொடர்மொழிகள் நின் பறையடிக்கின்றன. இப்பொருளிற் பிறபதிகத்தொடர்க ளெல்லாம் இதனோடு பொருந்தக் காண்பாம். பிறிது பொருட்கு இப்பதிகம் இடந்தராது. இந்கிலையில் இவையெல்லாம் ஒருங்கு நின்று தெளிவிப்பது மருமக்கட்டாயமன்றி மக்கட்டாயமன்றென்று விளக்கமாகும். (v) –-ஆம் பதிகத்தொடர்ப் பொருட் குறிப்பு. (1) இனி, எஞ்சிரிற்கும் 5-ஆம் பதிகமொன்று ஆராயக்கிடக் கின்றது. அதன் பொருளையும் ஒருவாறு அளந்தறிய முயலுவோம். இதில் கிளைகினத்தும் தொடர் நெடுஞ்சேரலாதற்கு, சோழன்மணக் கிள்ளியீன்ற மகன்" என்று நிற்கிறது. இதில் நிரப்பவேண்டிய சொற்குறையுண்மை புலப்படுகிறது. நிற்கிறபடி இச்சொற்றொடரில் பொருத்தமும் பொருளும் இல்லை. (3) இதுவரையில், இப்பதிகத்தலைவனான செங்குட்டுவனை நெடுஞ்சேரலாதற்கும் சோழன் மகள் மணக்கிள்ளிக்கும் பிறந்த மக னென்று இத்தொடர் குறிப்பதாகப் பலரும் கொண்டமைத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/44&oldid=1444784" இலிருந்து மீள்விக்கப்பட்டது