பக்கம்:சேரர் தாயமுறை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாய முறை அவருமையின் இத்தொடரை ஆதாரமாக்கி, சேரலாதற்குச் செங் குட்டுவன் தாயனெனவும், அவன் தாய் சோழன் மகளெனவும் சிலர் கருதுகின்றனர். இவர் கொள்கைக்கு ஆதாரமாய்க் காட்டக்கூடிய இதனினும் சிறந்த ஒரு சொற்றொடரும் நான் காணுகின்றேன். இளங்கோவடிகளே தம் நாடகக்காப்பியத்தில் திகழொனிஞாயிற் றுச் சோழன் மசுளீன்றமைந்தன்............. செங்குட்டுவன்” என்று கூறுகின்றார். அடிகளை விட அவர்குல முறையைத் தெளிவிக்கப் பிறர் யாரும் அருகரில்லை. அவர்வாக்கியத்தை எடுத்தெறிய அதிகாரம் எவர்க்குமில்லை. ஆகவே இவ்வாக்கியத்தால் அவருக்கும் அவர் தமை யன் செங்குட்டுவனுக்கும், தாயாவாள் சோழன் தாயை என்றே ஏற் படுமானால், இதை ஒப்புக்கொண்டு பதிற்றுப்பத்துப் பதிகப்பாக் களின் ஆதாவைக்கூடப் புறக்கணிக்க வேண்டிவரும். ஏனெனில், அப்பதிகப்பாவலர் சோர்குலத்துக்கு அந்நியர். அடிகனோ, அக் குடியிற் பிறந்து சிறந்த பெருந்தகையாராவதோடு, செங்குட்டுவ னுக்கு உடன் பிறந்த தம்பியுமாவர். அதனால் இது சம்பந்தமாக அவர் கூற்றே ஏற்றபெற்றியதாகும். இவருடைய இவ்வாக்கியமே அடியார்க்குநல்லாருரைத்தொடருக்கும் ஆதரவாயிருக்கலாமெனவும் தோன்றுகிறது. ஆதலால் இத்தொடர்களின் பொருளை ஊன்றி ஆராய வேண்டுவது மிகவும் அவசிய மயாம். {b) அடி.களின் மூலவாக்கியத்திலும் அடியார்க்குகல்லாரின் உ.ரைத்தொடரிலும் வருகின்ற மகள்' எனும் சொல் தாயைப்பொரு ளிலேயே நிற்குமாயின், இதுவரை நாம் செய்த ஆராய்ச்சியெல்லாம் லிழல்நீராகும். அதற்கஞ்சி, அச்சொல்லுக்கு அப்பொருளே அமையு மாயின் அதைக்கொள்ளப் பின்னிடையும் பெற்றியில்லை. பதிற்றுப் பத்துப் பதிகத்தொடர்கள் ஈண்டு மகட்சொல்லைத் தாயை எனக் கொள்ளற்கு இடந்தருமாயின், சங்கையின்றிச் சோருக்கு மக்கட் டாபமேயுள்ளதெனக் கொள்ளல் கூடும். பதிகங்களோ மருமக்கட் டாயத்தையே சுட்டுகின்றன. 7-ஆம் பதிகத்தொடர் அறவே மக்கட் டாயத்தை மறுத்து மற்றதனையே வலியுறுத்துகின்றது, இவற்றை .............. ...... 4

  • வாழ்த்துக்காதை. உரைப்பாட்டுமடை வரி--2, 3.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/49&oldid=1444790" இலிருந்து மீள்விக்கப்பட்டது