பக்கம்:சேரர் தாயமுறை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொர்தாயழறை (vil) மற்றுமோ ரையமகற்றல். இனி, 'றுக்தை தாணிழ விருந்தோய் நின்னை' என்று வரந்தரு காதையில் இளங்கோவும், நிமித்திகன்.........சேர்தி நீயெனச் சோர லற் குரைத்தவன் டைந்தரை நோக்கி தந்தாச்செங்கோ லத்தமியின் பத் தாசாளுரிமை யிளையோற்குண்டென' என்று பதிகவுரையில் அடியார்க்குகல்லாரும், இமையவரம்பனையும் செங்குட்டுவன் இளங்கோ என்பாரையும் முறையே ' நுர்தை,' 'மைந்தர்' எனச் சுட் டிக் கூறியதைக்கொண்டு, இவர்கள் அவனுக்குப் புதல்வரேயாகவேண் டும் எனச் சிலர் வாதிக்கவரலாம். ஆனால், இவ்வாராய்ச்சியில் எவ் வித முடிபையும் இச்சொற்களைக்கொண்டு துணிதற்கில்லை. தந்தை அர்தை எந்தை என்பன முன்னோன் உன் தலைவன் என்னிறைவன் என்ற பொதுப்பொருளில் மேம்பாட்டுச் சொற்களாயும், மைந்தர்' என்பது ஆண்மக்கள் ஆண்சிஞர் என்று குறிக்கும் ஒரு பாராட்டுப் பொதுச்சொல்லாயும், சான்றோர்பாட்டுக்களிற் பெருவழக்காய் வரு கின்றன. இவை 'பிதா' புகல்வர்' என்ற முறையை மட்டும் பாண்டும் சுட்டி நிற்கும் நியதியுடையனவல்ல. 'எந்தை வாழி ஆதனுங் ' சான்று வேங்கடத்து வேள் ஒருவனைப் புலவர் ஆத்திரையனாரும், 'அஃதை தந்தை அண்ணல்யானை அடுபோர்ச் சோழர்' கானப் பிறரும் பாடிய தும், இனைய பல பிறவும் கொண்டு, நத்தைச்சொல்,- உன் இறை வன்--உன் முன்னவன்- என்ற பொருளில் அமையுமெனத் தெளிகின் றோம். மாந்தர் மைந்தர் மக்களாண் பொதுப் பெயர்' எனும் திவா கரச் சூத்திரத்தால், மைந்தர்--ஆண்மக்களின் பொதுப்பெயரென்று அறிகின்றோம். ஆகவே, நுந்தை' மைந்தர்' என்ற சொற்களை வைத்துச் செங்குட்டுவனும் அவன் தம்பி இளங்கோவும் நெடுஞ்சேர லாதற்கு நேரே பெற்ற புதல்வராவரென வரையறுத்து முறைகொள்ள இயலாது. மருமான் மாராய மைந்தருக்கு அவர் தம் குலமுதல்வனான அம்மான் கோவை நுந்தை' என்று சுட்டுவது தவறாகாது, தகவுடைய தேயாகும். பிதா-புதல்வர் என்று தெளிவாக விதந்து சுட்டும் வேறு பிரயோகம் ஒன்றும் சோரைப்பற்றிய பழம்பாட்டுக்களில் யாண்டும் இன்மையால், ஈண்டும் அம்முறையை இச்சொற்களால் மட் டும் அமைத்துக் கோடற்கு அவசியமில்லை. ஆகவே, இதுவரை செய்த இவ்வாராய்ச்சியாற் சேரரை மக்கட்டாயமுடையாகத் தெரிவிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/52&oldid=1444793" இலிருந்து மீள்விக்கப்பட்டது