பக்கம்:சேரர் தாயமுறை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சேராதாயழறை. சான்றுகளெதுவும் கிடையாமையோடு, அவர்மரபினர் மருடிக்கட் டாயத்தினரேயாவரென்று ஒருவாறு துணியப் போதிய ஆதாரமும் கண்டோமாவோம். பகுதி ச . பிறசான்றுகள் இதுவரையில் பதிகத்தொடர்களின் சொல்லமைப்பையும் ஆற்ற லையும் கொண்டு அவற்றைத் தனித்தனியே ஆய்த்து வந்தோம். இனி இவ்வாராய்ச்சிக்குப் பொதுநின்றுதவும் சிலசெய்திகளையும் துணைக்கொள்கைகள் சிலவற்றையும் இங்கு விசாரிப்போம். துணைச்சான்றாய்ச் சேரர் தாய்வழித் தாயமுறை துலக்குஞ் செய்திகளாவன: (I) பதிகங்குறிக்கும் சோர்தாய்மார் பாட்டுக்களில் சுட்டப்பெறமை. (1) பதிற்றுப்பத்துப்பாட்டுக்களில், 2 சரலாதன் கலங் காய்க்கண்ணிநார்முடிச்சேரல் செங்குட்டுவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் இரும்பொறை இளஞ்சோலிரும்பொறை என்ற பாட் இடைச் சேரவேந்தர்பலர், பெயர்கள் குறிக்கப்படுகின்றன. 'நன்னுதல் கணவ, நல்லோள் கணவ,' 'புரையோள் கணவ,' 'ஒண்டொடி கணவ', “நின் பேரியலரிவை', 'நின் கற்பின் மாணிழையரிவை', 'வாணுதல.ரி வையொடுகாண்வா' என்று அவர்பலரை அவரவர்மனைவிமார் கற்புறு காதற்சிறப்பாற் சுட்டியும் அவரைப்பாடிய புலவர் பாராட்டிச்செல் கின்றனர். எனினும் பதிகத்திக் குறிக்கப்பெற்ற வெளியன் வேண் மாள் கல்லினி, பதுமன் தேவி, சோழன்மகள் நற்சோணை, வேண் மாள் - அந்துவஞ்செள்ளை முதலிய பெண்டிர்யாரும் யாண்டும் எச் சேரருக்கும் மனைவியாகச் சுட்டப்பெறாமை ஈண்டுச் சிந்திக்கத்தக் சது. இப்பெண்மணிகள் கோச்சோருக்குரிய பெருந்தேவிமாராயின், அச்சோரைப்பாடும் புலவர் அவர்பெண்டிரைச்சட்டிப் பராட்டும் பல இடங்களில் யாண்டேலும் இப்பெருமாட்டிகளுள் யார்? புரையாவது ஒரு புலவரேனும் சுட்டாமல், எல்லோரையுமே எல்லாப்புலவருமே மறந்துவிட்டு, பிற்குறிப்பாகப் பதிகப்பாட்டுக்களில் மட்டும் இவரை விதந்து கூறுவானேன்? உண்மையில் இப்பெண்மைப்பெருந்தகையார் கோமன்னர்மனைவிமாராயின், பாட்டுடைத்தலைவரின் பெண்டிரைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/53&oldid=1444794" இலிருந்து மீள்விக்கப்பட்டது