பக்கம்:சேரர் தாயமுறை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயமுறை, 31 வேட்டல்கூடும். இவர் யாரை மணந்தாலும், இப்பெண்கள் பெறும் ஆண்மக்கள் எல்லாரும் சேரருக்கு மரு*ராய்ச் சேரநாட்டில் வழி முறையே அரசுரிமைக்கு அருகராவர். (4) மாதுலச்சோரொடு மருகச்சேரரை மட்டும் சுட்டி, அவர் தந்தையரைத் துலக்காவிட்டால், அவர் தாயரை மணந்தகணவரில்லாத மகளிராகக் கருக நேருமாகையால் அவ்விழிக்கவை அற விலக்கி, "மக்கட்டாயமுடைய தமிழகம் மதிக்க மணந்து சிறந்த கற்புடைக் தாய்க்குடிப்பெருமையுடையர் பாட்டுடைத்தலைவ"ரென விளக்கும் பெற்றி வேண்டப்படுகிறது. அதனாலே அக் கோச்சோர்குலம் விளக்கும் பதிகங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோச்சேரன் தாயையும் அவன் தந்தை யொடு விளக்கி, அவ்விருவர் பெற்றமகன் இனையன் எனத் துலக்கி, இன்ன பெருங் கோச்சார்கு இவன் மரு மான் எனக் குறித்து, விவரமெல்லாம் விளக்கமுற விரிக்கின்றது. ஒவ்வொருபதிகமும் பாட்டுடைத்தலைவனின் இருமுதுகுரவபையும் விதந்துகூறி, அதன்பின் அவனை அவரீன் றமகனென ஒருபடியே தெரிநிலை முறையிற் குறித்துப் போகின்றது. அன்றியும், அவன் முன் தோன்றலான கோச் சோனை முதளிர்கூறி, பின் பெற்றோர் பெயர் கூறி, அச்சோனுக்கு அப்பெற்றோர் ஈன்றுதவிய மகன் எனப் பதிகம் தோறும் தவறாமற் கூறிப் போவதால், அப்பாட்டுடைத் தலைவன் கோச்சேரனுக்கு வழித்தோன் நலான மருகன் என்பதும் குறிப்பு வகையால் துலக்கப்படுகிறது. (ii) பதிற்றுப்பத்து, சோரின் ஆட்சிமுறை. இனி இப்பதிகங்கள் கூறுமரார்வரிசையைச் சிறிதாராய்வோம். சோசிம்மாதனத்தில் உதியஞ்சேரலுக்குப்பின் இமையவரம்பனும், அவனுக்குப்பிறகு அவன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்வேனும் முறையே ஏறினரெனவும், இவருள் இரை யோனாகிய குட்டுவனும் ஆண்டு முடித்தபின்னரே இவரிருவருக்கும் தொடர்புடைய பதுமன் தேவிமக்களிருவரான நார்முடிச்சேரலும், ஆடுகோட்பாட்டுச்சோலாத னும், அவர்களுக்கிடையே சோழன் மணக்கிள்ளிதேவிமகன் சென் குட்டுவனும் முறையே அரசு கட்டிலேறி நாடாண்ட எசெனவும் தெரி இறது. மற்றொரு கொச்சோர்வழி முறையில் அந்துவன்சோல் முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/55&oldid=1444796" இலிருந்து மீள்விக்கப்பட்டது