பக்கம்:சேரர் தாயமுறை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயழறை. கும் செய்தியெனத் துணியக்கிடக்கிறது. இப்பதிற்றுப்பத்துச் சேரரின் ஆட்சிமுறையால் இத்துணிவை வலியுறுத்தி, இதற்கு மாறான மக்கட்டாயக்கொள்கையை நலிகிக்கும் நியாயங்கள் சில வற்றை இங்கு நிதானிப்போம். அவை வருமாறு:--- (1) மக்கட்டாயமுடைய கோக்குடியில், மயின் முறையாய் முதல் மகனின் முதல்மகனே வழி முறையே அரசுபெறற்குரிமைபூண்பான். கோலோச்சும் கோவேந்தற்கு ஆண்மக்கள் பிறந்திருக்க, அவனா விலக்கி வேந்தனுடன் பிறந்தவர்கள் நாடாளுமூரிமை கொள்ளார். மரு மக்கட்டாயக்குடியாமேல் உடன் பிறந்தாரனைவருமே வரிசைமுறை யில் ஆண்டு முடிந்தபிறகுதான், அடுத்த கீழ்ப்படியிற் சோதரிமார் மக்கள் - அருந்தரவராகிய மருகர்கள் - ஆட்சிபெறுவர். இம்முதைாரிற் பதிற்றுப்பத்திற் பாடப்பெற்றுள்ள சோபாம் பரையைப் பரிசோதித்துப் பார்ப்போம். சோரை மக்கட்டாய முடையராய்க் கருதுபவர் எண்னுகிறபடி 2-ஆம் பதிகத்தலைவனான இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு, பதுமன் மகள், மணக்கிள்ளி மகள் எனும் இருமனைவியரால்,--களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், செங்குட்வேன், ஆேேகாட்பாட்டுச்சேரலாதன் என மூவர்மக்கள் உளர். இருந்தும், இவர்களை விலக்கி இவர்தம் சிரிபதந்தையான பல்யானைச் செல்செழுகுட்டுவன் முடிசூடி 25 ஆண்டு அரசு வீற்றிருக் கின்றான். அவனுக்குப்பிறகு கான் அவன் தமையன் மக்களான இம் மூவரும் நாடாட்சி பெறுகின்றனர். இது மக்கட்டாய அறமுறையில் நிகழொணாதது. ஆனால், சோர் மருமக்கட்டாபமுடையராகில், பதிற்றுப்பத்தில் நாம் காணும் முறைதான் அறமுடையாகும். இமையவரம்பலுக்குப் பின் அவன் தம்பியே தாய்வழித்தாயக்கிரம் உரிமையில் அரசனாக வேண்டும். அவ்விருவர்களுக்கும் பிறகே, அவர்களின் மருகர்கள் தங்கள் வயதுக்கிரமவரிசைப்படி ஒவ்வொருவராய் முடிபுனைந்து நாடாள்வர். மேலோரம் கண்டபடி, களங்காய்க்கண்ணிநார்முடிச்சோல் ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் இவர்களின் தாய் சோர்கோக்குடிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/57&oldid=1444798" இலிருந்து மீள்விக்கப்பட்டது