பக்கம்:சேரர் தாயமுறை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோர்தாயமுறை பிறப்புடையவள், பதுமனுக்கு மனைவி. ஆவிக்கோமான் பதுமன் எனும் வேளுக்குவாழ்க்கைப்பட்டு, அவனால் இவள் சேரர் காக்குடிக்கு இருமக்களை ஈன்று தவினள். அதுவேபோல் ஈற்சோணை என்பாளும் சோர் குடிப்பிறர்து சோழனை மணந்து வாழ்ந்தவளாகும். அவளீன்ற மக்கள் செங்குட்டுவனும் இளங்கோவும் ஆவர். இளங்கோ துறவு பூண்டு அடிகளாகவே, அத் தாய்வழியிற் கோலுரிமைக்குடையவன் குட்டுவன் மட்டுமேயாகிநிற்பன். இவர்கள் தாய் நற்சோணையும் வேள்பது மனின் மனைவியும் சேரர்குடியில் மணத்து புகுந்த பிறகுடிப் பெண்டிரில்லை, அக்குடியிற்பிறந்து சிறந்த பேராசிமாராவர். அவர்கள் வயிற்றுதித்தமக்களான மூவரும் இமையவரம்பனுக்கும் அவன் தம்பி குட்டுவனுக்கும் பிறங்கடையரான மருகராவர். ஆகவே தங்கள் மாமன்மாரான அவ்விருவரும் ஆண்டு முடித்தபிறகு இம்மருகர் மூவ ரூம் வழிமுறையில் தம் மரபுதியதிப்படி ஆட்சி பெறுகின்றனர். இது அறமும் அடிப்பட்ட குடிவழக்குமாய்ப் பொருத்தமும் சிறப்பும் பெற்று அமைகின்றது. இவர்களுக்கு முன் இமையவரம்பலுக்குப் பின் இவர் தம் இளையமாமனான செல்கெழுகுட்டுவன் நாடாளுவதில் வரிசைமுறைப்பிறழ்ச்சி யில்லை. இவர் தம் ஆட்சிமுறையில் தாய்க் குடித் தாயமுறையறமே பேணி ஓம்பப்படுகின்றது. (2) மேலும், இம்மூவருக்கும் காம்பெற்ற தாயர் இல்லையென்று யாண்டும் துலக்கப்படவில்லை. இவருட் செங்குட்டுவனுக்கு அவன் பெற்ற மகன் இருந்ததாக 5-ஆம் பதிகம் விதந்தும் கூறுகிறது. அவ் வாறு தநயர் உளராயின், மக்கட்டாயமுறைப்படி தந்தைக்குப் பிறகு உடனே உரியதாயரே முடி சூடவேண்டுவதன்றி, இவ்வாறு சோ தார்மூவரும் தம்முள் வரிசைமுறையில் ஒவ்வொருவராய் ஆட்சி பெறுவது அவசியமும் அறமும் இல்லை. தம் தநயரைவிலக்கி இம்மூவ ரும் முறையே ஆண்டதும், இவர்களை விலக்கி இவர்களுக்குமுன் பல் யானைச் செல்கெழுகுட்டுவன் ஆண்டதும் இவர்குடியில் மருமக்கட் டாயம் உண்மையையும், அம்முறையில் இவர்களுக்கு உள்ள தாய் வழித்தாய உரிமையையும் நன்கு வலியுறுத்தும், (3) இன்னும், மக்கட்டாயமுறையிற் கடைசியில் ஆண்ட அரச மனின் அடுத்த பிறங்கடை (வாரிசு) க்குத்தான் அடுத்த பட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/58&oldid=1444799" இலிருந்து மீள்விக்கப்பட்டது