பக்கம்:சேரர் தாயமுறை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொத்தாயழமை சுட்டவும் வருகின்றது. மக்கட்டாயாாடுகளில் மருகர் மாமன்மார்க்கு என்றும் வழித்தோன் நலாகமாட்டார். மருமான் மார்க்குரிய பெயர்ச் சொல் அவ்வுறவுமுறைக் குரிமையின்றித் தம் தந்தைக்குத் தாயாாய் வழித்தோன்றலாவாரைக் குறிக்கப்பெறுவானேன்? மக்கட்டாய முறையில் அச்சொல் அப்பொருளி லாட்சி பெறும் ஆற்றலும் ஆறும் இல்லை. மருமக்கட்டாயவழக்கம் தமிழகத்தில் உளதாயின் அம்முறையில் வழித்தோன்றலாவார் மருகரேயாகையால், நாளடை வில் “மருகன்” எனும் சொல், மருமான்-எனும் முறைசுட்டும் தன் நேர்பொருளை மட்டுமன்றி, வழித்தோன்றல் எனும் சார்புப்பொருளை யும் வழக்காற்றாற் பெறுவது இயல்பாகும். பிறகு இருதாயக்குடி களிலும் தாயமுறையைக்குறியாமலே பிறங்கடை (வாரிசு) ஆவார் எவ ரையும் வழித்தோன்றல் எனச் சுட்டும் பொதுச்சொல்லாகி வழங்கப் பெறும். இதுவே இச்சொல்லுக்கு இப்பொருள் கிடைத்த வாலா றாக வேண்டும். என்றும் யாண்டும் மருமக்கட்டாயமறியாத மக்கட் டாயம் மட்டுமே வழங்கும் ஒருநாட்டில் மருகர் என்றுமே வழித் தோன்றலாகாராகையால், அவர் பெயர் அப்பொருளெய்ததியதியில்லை! வழியுமில்லை. ஆகவே, தமிழில் இப்பொருளில் இச்சொல் வழங்கி வருவதாலும், தமிழகத்திற் சேரநாடல்லாத பிறிதுபுலமெல்லாம் மக் கட்டாயமே தொன்றுதொட்டு நினை வெட்டும் எல்குறிக்கும் கால மெல்லாம் கையாளப் பெறுவதாலும், இச்சொல்லுக்கு இப்பொரு ளாட்சி குட புலச் சேரர் குடித்தாயமுறைகொண்டே கிடைத்திருக்க வேண்டுமென்பது தெளிவு பெறுகிறது. எனவே, பழம்பாட்டுக்களிற் சோரையெல்லாம் மருகர் எனவே குறித்துப்போகும் வழக்காற்றால் அச்சொல்லின் பிந்திய பொருள் கொண்டு அவரை மக்கட்டாயமுறை யில் வழித்தோன் றல்கள் எனக் கொள்ளுவதைவிட, அவர்களின் மரு மக்கட்டாயமுறையையே அது சுட்டுமெனவும், அவர்தம் தாயமுறை வழக்குப்பற்றியே நாளடைவில் அச்சொல் வழித்தோன்றல் எனும் பொதுப்பொருள் பெற்று மக்கட்டாயமுறையில் வழித்தோன்றலாவா ரையும் குறிக்கலாயிற்றெனவும் கொள்ளுவதே பொருத்தமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/62&oldid=1444805" இலிருந்து மீள்விக்கப்பட்டது