பக்கம்:சேரர் தாயமுறை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழுக்கவழக்கங்களைப் பேணுபவரென்பதும் உலகறிந்த செய்தி இப்படியிருக்க, இவ்வாபிய மாப்பிள்ளைமார் குடநாபெருக்சுபின், அங்கே பரசுராமர் சாபத்துக்குப் பயந்து, தம் பழைய குலவொழுக் கன் குன்றப் பல புதிய அனாரிய ஆசார அனுஷ்டானங்களோடு மருமக் கட்டாயத்தையும் மேற்கொண்டுள்ள அறிந்துக்களின் தூண்டுதலால், தாங்களும் மருமக்கட்டாயிகளாகி விட்டார்களா? அல்லது இவர்கள் பூர்வீக அராபியாரில் கையாளப்பட்ட பண்டை மருமக் கட்ட டாயத்தைப் புதியமகம்மதியர் அக்காட்டில் மாற்றின போது அதனைத் தாம் கைவிடச்சம்மதியாமல் அரபியாவைவிட்டுக் குடநாடுபுகுந்து, தம் பழம் தாயமுறையை விடாது பேணிவருகின்றனரா? அராபி தேசத்தில் ஆதிகாலத்தில் மருமக்கட்டாயமே இருந்ததென்பது நல்ல ஆராய்ச்சியாளர் ஆய்ந்து துணிந்தசெய்தி. * அராபிராட்டுக்கும் குடபுலத்துக்கும் தொன்றுதொட்டு நெருங்கிய தொடர்புண்மையும் சரி தமறிந்த செய்தியேயாகும். இக்கிலையில், அராபியர் மகம்மதியராகப் பல புதிய ஆசாரத்திருத் தங்களை ஏற்படுத்தியமைவதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே, சில மருமக்கட்டாய அராபியர் குடபுலக்திற்குடி பேறினவர் நாளடைவில் ஹிந்துக்களாயினர்:--அவரோடு பின்னர் மகம்மதிய மருமக்கட்டாயிக ளான அரபிமாப்பிள்ளைமாரும் சமயமாறினும் தங்கள் பழவழக்கம் களைக் கைவிட மனமில்லா தவராய், அப் பழவழக்குக்கட், டெமற்ற தமது நாட்டைவிட்டுச் சேரநாட்டில் வந்தேறி, தக்குலத்தவர் பல நாற்றாண்டுகளுக்குமுன்னரே ஆண்டுப் போந்து தமது நாட்டுத்தாய் வழித்தாயமுறையைவிடாது பேணிவரும் குடபுலக்குடிகளோடு ஒருக்கு வாழலாயினரென்று கொள்ளலாமா? இத்தாய்வழித்தாயத்தார் ஆதிக்கம் வளர்ந்தவிடத்தில், தெற்கே மாஞ்சில்காட்டுத் தமிழரைப்போலப் பிறமக்கட்டாயிகள் சிலரும் நாளடைவில் கால இட மாறுதலால் தாய்வழி முறையைத் தாமும் கையாளத்தொடங்கியிருக்கலாம். அதற்குச் சமாதாளங்கறுமுகத் " W. ராபர்ட்ஸ ன் ஸ்மித் என்பவர் எழுதிய “பழைய அராபியாவில் உறவுமுறையும் மணவியலும்" என்ற புத்தகம் பார்க்க. (Kingship * marriage in Early Arabia by W. Robertson Smith.) பHTH

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/67&oldid=1444811" இலிருந்து மீள்விக்கப்பட்டது