பக்கம்:சேரர் தாயமுறை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம்.


பல ஆண்டுகளுக்கு முன் சேரர் தலைநகரான வஞ்சிபற்றிய ஆராய்ச்சிக்காக முன் இடைவிட்டுப்படித்துவைத்த பதிற்றுப்பத்தை மீண்டும் முற்றும் ஒருமுகமாகத் தொடர்ந்து உற்று நோக்க நேர்ந்தது. அப்போது அந். மா ஓட் செய்யுட்களுக்கும் பதிகப்பாட்டுக்களுக்கும் பாட்டுடைச் சேரரைப்பற்றிய தொடரமைப்பிற் சில மாறுபாடுண்டை புலப்பட்டது. பதிகங்களிலெல்லாம் ஒருபடியும், தாலின் பாட்டி லெல்லாம் வேறு விதமும் குடிமரபுக்குறிப்புக்களைச் சுட்டுந்தொடர் கள் அமைந்துகிற்பது என் கவனத்தைக் கவர்ந்தது. எனினும், அப் போதுசெய்த சோரின் ஊராராய்ச்சியை முடித்துப் பின் இச்செய் யை ஆய்கல் நலமொனரினத்து அதனைக் குறித்து வைத்தேன், பிறகு வஞ்சியற்றிய என் ஆராய்ச்சியை முடித்துச் “சேரர்பேரூர்” என்ற கட்டுரையை எழுதி, என்னை அது செய்யத் தூண்டிய பெருந்தகையார் கற்பலை கசட,க்கர் ஐக் கற்றதனாலாயப்பன் காட்டுமா போலக் கற்ற படி நிற்றலை மேற்கொண்டொழகிய தமிழ்வாணரான தஞ்சை வக்கில் ராவ்பகதூர் ஸ்ரீநிவாசப்பிள்ளையவர்களுக்கு அனுப்பினேன். அதன் பிறகு, தாயே ஆசாயக் குறித்து வைத்த சிலசொற்றொடரின் கருக் தறியவிரும்பி மறுபடியும் பதிற், பப்பத்தையும், சிலப்பதிகாரம், புறப் பாட்டுக்களில் சோரைப்பற்றிய பகுதிகளையும் ஊன்றிப்படித்தேன், அப்போது, தமிழிலக்கியமுழுதும் தந்தைக்கு மகன்முறைசுட்டு மிடந்தோறும் இன்னான் சேய் இன்னான் என்ற வாய்பாடே எங்கும் வரும் பொதுவியல்புக்கு மாறாகப் பதிற்றுப்பத்துப் பதிகங்கள் மட்டும் வேறோர் தனிமுறையாளக் காரணம் வேண்டுமெனக் கண்டேன். இப்பதிகங்களில் யாண்டும் முன்னைய சோர்பெயர்க்கெல்லாம் தவிரா மல் "குவ்வுருபு கொடுத்துப் பிரித்து முதலில் நிறுத்தி, அதன்பின் அவனுக்கு இன்னான் தேவி யீன்றமகன், பாட்டுடைச் சேரன்” எனத் தெரித்துப்போகும் தனிப் புது முறை என்னை மன்றிச் சிந்திக்கச் செய்தது. அச்சிந்தனையும் அதுபற்றித் தொடர்ந்த ஆராய்ச்சியும் பண்டைச் சேரர் தாய்வழித்தாயத்தார் என்பதை எனக்குக் கெளி விக்க, அதன் உண்மையுணாலானேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/9&oldid=1192194" இலிருந்து மீள்விக்கப்பட்டது