பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சேற்றில் மனிதர்கள் காந்தி அதற்குள் எழுந்து, குளித்துவிட்டாள் போலிருக் கிறது. முகப்பவுடர் வாசனை வருகிறது. சம்முகம் எழுந்து படுக்கையில் உட்காருகிறார். “காந்தி?...” "என்னப்பா!...” விரிந்த கூந்தலும் சீப்பும் கையுமாக வெடவெட என்று உயரமாக வரும் அவளைப் பெருமையுடன் அந்த மங்கிய வெளிச்சத்தில் பார்க்கிறார். "சர்ட்டிபிகேட், இன்டர்வ்யூ கடிதாசி எல்லாம் பத்திரமா எடுத்து வச்சிருக்கியாம்மா?" “ராத்திரியே எடுத்து வச்சிட்டேம்பா..." "இன்டர்வ்வூ பதினோரு மணிக்குத்தானம்மா?" "ஆமாம்பா" லட்சுமி முட்சுள்ளியை வைத்து அடுப்பில் எரியவிட்டு ஒரு பல்லாயில் ஆவி பறக்கும் சுடு நீரைக் கொண்டுவந்து வைக்கிறாள். விளக்கொளியில் காலை நீட்டிப் பார்க்கிறாள். சிவந்து வீங்கி, முகம் முனைப்பு இல்லாமல் இருக்கிறது. “முள்ளுகிள்ளு குத்திச்சா?.” "ஒண்னுந் தெரியல. இன்னிக்கும் நடவுக்கு வாரதுக்கில்ல. இந்தக் காயிதம் ஒரு நாலு நா முன்ன வந்திரிந்திச்சின்னா எல்லாம் ஒழுங்கு பண்ணிக்கலாம்." "நாலு நா ழுன்னவே வந்திருக்கணும். கடித எண் தேதி மூணாந்தேதி. இங்க பதினொண்ணாந்தேதி நமக்குக் கிடச்சிருக்கு. இது இன்னிக்கித் தபால்ல வந்திருந்திச்சின்னாக்கூட ஒண்ணும் புண்ணியப்பமில்ல." "நேத்துதா நா புதுக்குடில நம்ம தங்கசாமிட்ட சொல்லி ட்டிருந்தேன். நம்ம பொண்ணு கூடத்தான் தொழிற்கல்வி வேணும்னு புதுசா அப்ளிகேசன் போட்டிருக்கு. அதும் எஸ்.எஸ்.எல் எபி. படிச்சிட்டு மூணு வருசமா வேலை கிடைக்காம ருக்கு கணக்குல, அறிவியல்ல, எல்லாம் நல்ல மார்க்கு உடனே மல படிக்க வைக்கனும்னு, குடும்பத்தில பையன்ைப் படிக்க வச்சி இவளையும் அப்ப முடியாம நிறுத்தி வச்சிட்டிருந்தேன். அப்ளிகேசன் போட்டு ஒரு மாசமாகுது. ஒரு தகவலும் தெரியலன்னு சொல்லிட்டிருந்தேன். ராத்திரி வந்தப்புறம்தான்