பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சேற்றில் மனிதர்கள் நினைச்சிக்க...” “...இல்லிங்க... இப்ப." "சும்மா அதும் இதும் சொல்லாத, சின்னம்மா ரோஸ் மில்க்தா குடுப்பாங்க. அப்பதா அவங்களுக்குத் திருப்தி சாப்பிடு." உதட்டில் வைத்தால் அந்தச் சில்லிப்பு பற்களைக் கொட்டுகிறது. காந்தி எல்லாக் குழந்தைகளும் வாங்கும் இனிப்பு ஐஸ் குச்சிகட வாங்கமாட்டாள். ஆனால் சில்லிப்பு சிறிது பழகிவிட்டதால் கூச்சம் விட்டுப் போய்விடும் போலிருக்கிறது. குடித்துவிட்டு டம்ளரைக் கழுவும் எண்ணத்துடன் கையிலேயே வைத்துக்கொண்டிருக்கிறாள். "அப்படியே வச்சிடும்மா. பூவு வந்து கழுவி வய்ப்பா!' "மாடி ரூம் திறந்திருக்குதா சின்னம்மா?” "துறந்துதா இருக்கு. லச்சு நேத்தெல்லாம் வந்து புது டேப்பெல்லாம் போட்டுட்டிருந்திச்சி. எல்லாம் அப்படி அப்படியே வச்சிருக்கிறான்னு காலம ஐயா கோவிச்சிட்டுப் போனாரு...” "என்னென்ன டேப்பு புதிசாருக்கு?” "அதா, ஐயா கோலாலும்பூர் போயிருந்தப்ப பேசின. தெல்லாம் நேத்து கொண்டிட்டு வந்திருந்திச்சி. பெறகு புதிசா குன்னக்குடி வயலின் டேப் ஒண்னு போட்டிச்சி, என்னா அருமை! வெறும் வயலின்ல, காவேரி உற்பத்திலேந்து சங்கமம் வரைக்கும். அது சொல்லி முடியாது: ஐயாவுக்கு ரொம்பப் புடிச்சிருந்திச்சி. வானொலிலேந்து டேப் பண்ணிருக்கு." "அட, அப்ப போட்டுப் பார்க்கனுமே!. வா காந்தி. மாடில ரேடியோ கிராம் இருக்கு ஸ்டீரியோ டேப் போட்டுக் காட்டுகிறேன்.” o காந்திக்குக் கூட்டைக் கீழே வைத்துவிட்டு ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு ஆகாயத்தில் பறக்க எழும்பினாற் போன்று அச்சம் மேலிடுகிறது. கால்கள் பின்னிக்கொள்கின்றன. "வா காந்தி! என்ன பயம்?...” நடுப்படியில் தயங்குபவளை மேலே கைப்பற்றி அழைக்கிறான். - மாடி அறை பெரிதாக இருக்கிறது. மெத்தை போட்ட இரட்டைக் கட்டிலில் பச்சைப் பூப்போட்ட விரிப்பு. குட்டை