பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 1 O1 சாம்பார் சாராயம் குடித்தாலும் நிதானமே இழக்க மாட்டான். “ஏழெட்டு ரூபாக்கிப் போவும். அவங் கெடக்கிறான். காலடில வந்து சுத்திச்சி. நான் புடிக்கப் போனனா?” “காந்திப் பொண்ணக் காண முன்னு சொன்னாங்க?" 'அதா வீரமங்கலம் உடயார் வூட்டுக்குப் போய் விசாரிச்சிட்டு வரச்சொன்னாங்க. அங்கொண்ணும் வரலியாம்." "பொட்ட புள்ளகள வக்கிறாப்பல வக்கணும். ஒண்னும் போற போக்கு செரியில்ல. இந்த விருத்தாலம் பய கூட மூலைப்பயலுமில்ல சேந்திட்டுத் திரிகிறான்? வீரபத்திரன் சொல்லிட்டிருக்கிறான், அம்பது ரூபா குடுக்கிறானுவளாம் அஞ்சு, நிமிட்டில அல்லாம் பேத்திட்டுப் போயிடணுமாம்! களுதப் பயலுவ, வரிக்கல்லத் துக்கி அப்பால போடுறாப்பல நினைச்சிட்டானா?” o "முதலாளி கம்முனு இருக்கிற வரய்க்கும் நமக்கு ஒண்னும் பயமில்ல, அதெல்லாம் கைய வய்க்கமுடியாது.” மீசையைப் பல்லில் கடித்துக் கொண்டவாறு பொங்கும் மகிழ்ச்சியை வடிவு அடக்கிக் கொள்கிறான். அம்சுவே அவனுக்குச் சொந்தமாகிறாள். அவருக்குத் தெரியாதா? சாடை மாடையாக லட்சுமி யக்காளும் புரிந்து கொண்டிருப்பாள். 'நாளக்கி சம்பா ஒழவு இருக்குதாம். வீரபத்திர ஞ் சொன்னான். நம்ம பக்கம் எதும் செல்லல. இங்கியும் சம்பாச் சீரெடுக்கணும். அது ஒரு ரெண்டேக்கரிருக்கு. ஆனா மொதலாளி ஒடம்பு சரியில்ல. நாளக்கி மாட்ட ஒட்டிட்டு வாரேன். கருக்கல்லன்னே.” ஆவி பரக்க வடித்த சோற்றைத் தட்டில் போட்டுப் பரப்புகிறாள் தங்கச்சி. வண்டியோட்டிச் சென்ற பழனிப் பயல் அசுரப் பசியுடன் வந்துவிட்டான். சாட்டைக் குச்சியைக் கூரையில் பத்திரமாகச் செருகி விட்டுத் தலைத்துணியை உதறிக்கொண்டு, “சோறு வைக்கா? என்று ஆணையிடுகிறான். சாராயம் குடித்திருக்கிறான். "ஏண்டால, நீ மத்தியானம் என்ன சொல்லிட்டுப் போன? "என்னா சொன்னே?”