பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O2 சேற்றில் மனிதர்கள் "குடுரா காச சாங்காலம் அஞ்சு ரூபாயாக் கொண்டாந்து தாரேன்னு அரிசி வாங்க வச்சிருந்த காசத் தூக்கிட்டுப் போயிட்டா!' "நா என்ன இப்ப தரமாட்டேன்னா சொன்னே?." வேட்டி இடுப்பில் கைவிட்டு கசங்கிய ஒரு ரூபாய் நோட்டை எறிகிறான். "ஏண்டா, இதானா காசு!” "நாளக்கி மிச்சம் தாரேன்! சோறு. சோறு...!" "இந்தப் பய, நெல்லு மிசின்ல மூட்ட தூக்கிப்போட்டு நாலு அஞ்சி சம்பாரிச்சி இப்பிடிக் குடிச்சித் தொலக்கிறான். குடிசய வேற பேத்துட்டுப் போவனும்ங்கறானுவ. இன்னக்கிப் பூர ஒரு வேலையுமில்ல. ஒருமா நடவுக்கு அஞ்சாளுன்னு கணக்கு முப்பத்தஞ்சு ரூபா கூலிக்கு பன்னண் டாளுன்னு மேச் சாதிக்காரியல்லாம் மினுக்குச் சேல கட்டிட்டு நடவுக்கு எறங்கிடறாளுவ நா என்னாத்த அரிசி வாங்க, எண்ண வாங்க, புளி வாங்க?...” இதெல்லாம் யார் காதிலும்விழுவதில்லை. பழனிப் பயல் படுத்தும் தூங்கிவிடுவான். குப்பன் பீடி குடித்துக்கொண்டு பொன்னனிடம் கொஞ்சம் குந்திப் பேசிவிட்டு வருவான். வடிவு பிடியை வாயில் வைத்துக்கொண்டு குளத்தைச் சுற்றிக்கொண்டு வெளியே போவான். மடை பார்க்கும் பொறுப்பு அவனுக்குத் தான். சில சமயம் கருக்கலில் போய்விட்டு வருவான். இரவில் முதலாளியைப் பார்த்து, சங்க சமாச்சாரம், ஊர்சேதி பொது நிலவரம் பேசி வருவான். முதலாளி வீட்டுத் திண்ணையில் விளக்கெரிகிறது. “ஏண்டா? நீ போயி எந்நேரம் வந்து சேதிசொல்லுற? என்னாடா இருக்காளா இல்லையா. செறுக்கிமவ?." வசைகள் கட்டுக்கடங்காமல் பொல பொலக்கின்றன. "இல்ல மொதலாளி. நா அப்பமே வரனுந்தா பொறப் பட்டே. அதுக்குள்ளாற.” தலையைச் சொறிகிறான். பொய் எதுவும் கைகொடுக்க வரவில்லை. "உடயாரு மருமவ இல்ல. அவுங்கல்லாம் புதுக்குடிக்கு சினிமா பாக்க போயிருக்காவளாம். அங்க என்னமோ புதுசா படம் வந்திருக்கில்ல.” ".யா மவ; ஐயா காலு வீங்கிக் கிடக்காருன்னு ஒரு அச்சம்,