பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 107 வரலன்னா, நாளக்கித்தான் வருவேன். காபந்தா இருந்துக்குங்க." வெண்மையான வேட்டியும் சட்டையும் அணிந்து கொள்கிறார். வடிவு வெள்ளாழத் தெருவுக்குச் சென்று ராமலிங்கத்தின் வண்டியை ஒட்டிக்கொண்டு வருகிறான். அதற்கு முன் குடிசைக்குள் சென்று சட்டையணிந்து வேறு வேட்டியை உதறி உடுத்திக்கொண்டு, பாம்புத் தோலை ஒரு சாக்குச் சுருணையில் பத்திரமாகச் சுற்றி வைத்துக் கொள்கிறான். o நடவுக்குச் செல்லும் பெண்கள் வண்டியில் சம்முகம் ஏறச் சிரமப்படுவதைப் பார்த்து நிற்கின்றனர். "எங்க போறாவ? ஆசுபத்திரிக்கா?. தஞ்சாவூருக்கா?. ஒடம்பு ரொம்ப லேவடியாப் போயிட்டாரே?” "புதுக்குடிக்குத்தாம் போறாரு..." "பத்துப் பதுனஞ்சி நாளாச்சி கண்ணிலியே காணம்.” "ஒண்ணுக்கும் கவலப்படாத, ஆத்தாள நினைச்சி பாரத்த போட்டுருக்கிறம். சரியாப்பூடும்..” என்று கிழவி தைரியம் சொல்கிறாள். "சம்முவம், வண்டிலியா போற? நா வாரண்டால...!" கிழவர் தலைதுாக்கும்போது கிழவி தொட்டமுக்குகிறாள். "உனக்கென்ன இப்ப? இனி அங்கிட்டுப் போயி கள்ளக் குடிச்சிட்டு ஆடிட்டு வரணுமாக்கும்! கெட சும்மா!' "வாரேன் லட்சுமி. எங்கடா பழனிப்பய வந்தானா?” "ஆமா முதலாளி. கீச்சுக் குரலில் கூறித் தாவி ஏறி அமர்ந்துகொள்கிறான் பழனி, "மருள் நீக்கில பஸ் ஏத்திவிட்டுப் போட்டு மாட்ட ஒட்டிட்டுப் போற முதலாளி.” "சரி, சரி.” ஏரைத் துக்கிக்கொண்டு சின்னமயான் எதிரே வருகிறான். பழனி சாட்டையால் வீறி மாடுகளை முடுக்குகிறான். நல்ல பாதை இல்லை. ஆற்றுமேட்டுக்குக் கீழே கிழக்கே சென்று ஆற்றைக் கடக்கவேண்டும். உள்ளுரில் அவரால் நடந்துசென்று பஸ் ஏறுவது கடினம். மேலும் பலரும் பலதும் கேட்பார்கள் என்று சம்முகம் அஞ்சினார். வண்டி குலுங்கி, ஆடிப் பத்தடி கடக்கவில்லை. நாகு ஒட்டமாக ஒடி வருவது தெரிகிறது. "இந்தப் பயல ஆரு துறந்துவுட்டது? எல நிறுத்துடா வண்டிய வடிவு, அவனக்