பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OB சேற்றில் மனிதர்கள் கூட்டிட்டுப் போயி கதவச் சாத்திட்டு வா!' அதற்குள் நாகு நாக்குழம்ப எச்சில் ஒழுக வண்டியைப் பிடிக்க வந்து விடுகிறான். "நா. நா.ம். ஹை ஹை.. நம்.” "போடா வீட்டுக்கு! போ! எடுறா கைய!” பழனி வண்டியை நிறுத்த, வடிவு அவனை இழுத்துப் பார்க்கிறான். ஆனால் இந்தப் பேய்ப் பயலுக்கு எத்தனை வலிமை! "துக்கி ஆத்துல கடாசுடா! அடிச்சிட்டுப் போவட்டும்?" "நா. நாவு. நாம். ஹைஹை..'ஹை ஹை என்று தான் வண்டியில் போகவேண்டும் என்று கபடமில்லாத ஆசையை அவன் வெளியிடுகிறான். ஆனால் யாருக்கும் அது உகப்பாக இல்லை. இதற்குள் லட்சுமியும் விரைந்து வருகிறாள். இருவருமாக அவன் ஊளையிட, இழுத்துக்கொண்டு செல்கின்றனர். 'மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லாமல் ஒரு பயல வச்சிட்டு இப்படி வாழ்க்கையை இழுத்திட்டுப் போகவேண்டிருக்கே. என்று நெற்றியில் அடித்துக்கொள்கிறார். 11 புதுக்குடியில் காலையில் மழை பெய்திருக்கிறது போலிருக்கிறது. இரண்டு துாற்றல் விழுந்தால்போதும். சாலை கசகசவென்று கால்வைக்கத் தகுதியில்லாமலாகிவிடும். பஸ் நிறுத்தம் கசகசப்பின் உச்சம். சாதாரண நாளாக இருந்தால் சம்முகம் விசுவநாதன் வீட்டுக்கு நடந்து சென்றுவிடுவார். டவுன் பஸ் ஏதோ போகிறது. ஆனால் அதற்குக் காத்திருந்து, அது நிற்கும் இடத்திலிருந்து மீண்டும் நடப்பது பிரயாசையாக இருக்கும். வடிவு ஒரு ரிக்ஷாக்காரனிடம் பேரம் செய்து, மூன்று ரூபாயிலிருந்து ஒன்றே கால் ரூபாயில் இறங்கி, அவரை உட்கார்ச் செய்கிறான். "நீங்க போயிட்டு வாங்க முதலாளி. நா பின்னோடையே வாரேன்.” "வீடு தெரியுமில்ல?” 'ஏந் தெரியாது?”