பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 1 O9. கையில் சாக்குச் சுருணை, வீச்சம் இரண்டும் அவன் இரகசியத்தை அம்பலப்படுத்துகின்றன. .ப்பயல், பாம்பு கொன்றிருக்கிறான். விருத்தாசலம் பிள்ளை சொன்னது சரியாகத்தானிருக்கிறது! ". பெரிய வீதி தாண்டி, மண்டபம் கடந்து ரிக்ஷா செல்கிறது. வெயில் விரைவாக உச்சிக்கு ஏறுகிறது. மணி பதினொன்றிருக்கும் என்று தோன்றுகிறது. -- வழக்கம்போல் விசுவநாதன் மேல் திண்ணையில் உட்கார்ந்திருக்கவில்லை. - வண்டிக்கு ஒன்றேகால் ரூபாயைக் கொடுத்துவிட்டு மெள்ளப் படி ஏறுகிறார். உள்ளிருந்து பெரிய கண்களும் தாழம்பூச் சிவப்புமாக அவர் பெண்தான் வருகிறாள். "அப்பா இருக்கிறாராம்மா?” 1.குளிச்சிட்டிருக்காங்க. நீங்க ஆரைப் பாக்க வந்தீங்க?" அவள் கண்கள் அவருடைய பற்றுப்போட்ட காலின் மீது படிகிறது. "அப்பாரைத்தா, விசுவநாதன். கிளியந்துறை சம்முகம்னாத் தெரியும்.” - சற்றைக்கெல்லாம் நெற்றியில் துளி நீருடன் மேலே பனியனைப் போட்டுக்கொண்டு விசுவநாதன் வருகிறார். “என்னப்பா சம்முகம்? இரண்டாயிரம் ரூபாய் கிடைச்சிடிச்சா?’ சிரிக்கிறார். சம்முகத்துக்குச் சிரிப்பு வரவில்லை. மனதில் ஏதேதோ தலைகால் புரியாத ஆத்திரங்கள். அந்தச் சிறுக்கி நேத்துக் காலம ஒடிட்டா என்று அழவேண்டும் போலிருக்கிறது. ஆவள் உடையார் விட்டுப் பெண்ணுடன் சினிமாவுக்குச் சென்றிருக்க வில்லை என்று ஏதோ மனக்குறளி கூறுகிறது. ஏனெனில் அவள் ஒரு தீர்மானமில்லாமல் ராத்தங்கி இருக்கமாட்டாள். "நேத்துக்காலம அந்தச் சிறுக்கி வீட்ட விட்டுப்போனவ திரும்பி வர இல்ல, சாமி. ஒடயார் வீட்டுக்குப் போறேன்னு போனவ வரல. அங்க தலையாரிப் பயல அனுப்பிச்சேன். இல்ல, சினிமாவுக்குப் போயிருக்காங்கிறான். எனக்கு சமுசயம் ஏன்னா, அந்தத் தேவுடியா-மவன், இங்க அன்னிக்குக் காரில வந்தானே, அவன எங்க வீட்டுக் கோடரிக்காம்பு வீட்டுக்கே கூட்டியாந்தான். தெருத் திண்னயில உட்காந்து எங்காது கேக்க, இந்தச் சிறுக்கிகிட்ட எங்கூட்டுக்கு வந்து அப்பாரப் பாரு, உனக்கு