பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - - 1 11 பிள்ளைகளைப் பராரியா நிக்கவச்சிட்டிருக்காங்க நினைச்சிப் பாத்தா ஒரு முன்னேத்தமில்ல. சுடுகாட்டுக்குப் போக வழி குடுக்க மாட்டேங்கறாங்க. அன்னிக்கு சாமி கும்பிடாதியன்னும் வள்ளிக்கும் முருகனுக்கும் திரட்சிக் கல்யாணம்னும், ஊர் மேயுற திருட்டுச் சாமிகளை ஏண்டா கொண்டாடணும்னும் அசிங்க அசிங்கமா பேசினானுவ, நோட்டீசு போட்டு ஒட்டினானுவ. எங்க பொண்டுவ திருட்டுத் தனமா சாமி கும்புடப் போவாங்க. இப்ப இன்னிக்கு திடீர்னு சாமி கும்பிடணும், கோயில் சீர் பண்ணனும், இப்ப குடிசயக் காலி பண்ணுன்னு கிட்டிய வக்கிறான்.” "ஆர்.ராது?...” "அதா விருத்தாலம்புள்ள, இன்னும் ஊரில இருக்கிறவங்க அல்லாந்தா.” "இப்ப ரொம்ப செழிப்போ?...” "கோயில் சொத்தெல்லா அவங்கய்யில தான இருக்கு? பத்து வருசமா கொள்ளையடிச்சிருக்கானில்ல?" "திருட்டுப் பயலுவகதா சாமி பூதம்னு வேசம் போடு றானுவ அவனுவகளுக்குத்தான பயம்?” H. "... சாமி, என் காலப் பாருங்க! இது வேற ரோதன. அன்னிக்கிப்போன பிறகு நடமாட்டமே இல்ல." குதிகாலைத் திருப்பிக் காட்டுகிறார். பாத முழுவதுமே வீங்கி இருக்கிறது. அவர் கைவிரலால் வீக்கத்தை அழுத்திப் பார்க்கிறார். பிறகு உள்ளே சென்று சட்டையை மாட்டிக்கொண்டு திரும்புகிறார். அவரால் காலைக் கீழே ஊன்றி வைக்க முடியவில்லை. மெள்ள சுவரைப் பற்றிக்கொண்டு நொண்டினாற்போன்று அடுத்த வீட்டுப்படி ஏறுகின்றனர். -- வாயில்மேல் திண்ணையில் கைக்குழந்தைக்காரிகள், சளி, இருமல், தலைக்கட்டு என்று ஒரு நோய்க்கூட்டம் காத்திருக்கிறது. கடந்து உள்ளே செல்கின்றனர். இடைகழிக்கப்பால் பெரிய கூடத்தின் ஒர் ஒரத்தில் திரை இருக்கிறது. ஒரு வெள்ளைச்சேலை நர்சும், இன்னும் சில நோயாளிகளும், டாக்டர் உள்ளே பார்க்கிறார் என்பதை அறிவிக்கின்றனர். பெஞ்சி ஒன்றில் அவனுடன் அமர்ந்து கொள்கிறார். உள்ளிருந்தவர் வந்ததும் இவர்களை முதலாக விடுகிறாள். "அட... வாங்க சித்தப்பா, எனக்குச் சொல்லி அனுப்பக்