பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 சேற்றில் மனிதர்கள் கூடாது? நான் வருவேனே?” சம்முகம் பின் தொடருவதைப் பிறகே கவனிக்கிறாள். "நம்ம பழைய நாளைய தோஸ்த், கீதா கிளியந்துறை. நடையா நடப்பான். காலைப்பாரு...” சம்முகம் நாற்காலியில் அமர்ந்து சிறு ஸ்டுலில் காலை வைத்துக் காட்டுகிறார். பட்டுத்துணிபோல் மினுமினுக்கும் முடி. ராஜகளை. மொழுமொழுவென்ற கைவிரலினால் தொட்டுப் பார்க்கிறாள். முன்னுக்கு வரும்தன்மை எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் முடங்கி விடுவதில்லை. இப்படி அவர்கள் குடியில் பிறந்தவர்கள் நூற்றில் ஒருவரேனும் வரமுடிகிறதா? எங்கோ ஆயிரத்தில் ஒன்று. இத்தனை சலுகைகளைப் பற்றித் தம்பட்டம்போடும் காலத்தில்! கையைக் கழுவிக்கொண்டு வந்து வயசு அது இது எல்லா விவரங்களும் கேட்கிறாள். நீர், இரத்தம் எல்லாம் பரிசோதனை செய்ய வேனுமாம். எல்லாம் அங்கேயே செய்துகொள்ளலாமாம். இப்போது ஒர் ஊசி போட்டபின், அடுத்தநாள் பரிசோதனை முடிந்து விவரம் தெரிந்தபின் மருந்து கொடுப்பார்களாம். அது அமுங்குவது நல்லதல்ல. இரண்டொரு நாள் பாத்து கிழித்துவிடலாம். சரியாகப் போய்விடும். ஒன்றும் பயப்படுவதற்கில்லை. "அப்ப, நீ இன்னிக்கு எதுக்குடா ஊருக்குத் திரும்பிப் போகனும்? பேசாம இங்கியே தங்கிடு!...” சம்முகத்துக்கு அது உகப்பாகப் படுகிறது. ஆனால், அவரால் நடந்துபோக இயலாத நிலையில் காபி, சாப்பாடு என்று இவர் வீட்டில் தங்குவது சரியா? "இப்ப. இத தெருக் கோடிதான். நம்ம சாவித்திரி கூடப் படிச்ச பொண்ணு அவப்பாதான், இந்த பரிசோதனை பண்றாங்க நீ போயிச் சீட்டைக் காட்டி எல்லாம் குடுத்திட்டு வந்துடு. நானும் வரட்டுமாடா?” o - "வானாம் சாமி. நீங்க போங்க. நம்மபய, குப்பன் மகன் வடிவு வருவான். இருக்கச் சொல்லுங்க, வரேன்.” டாக்டரிடம் காட்டி ஒன்றுமில்லை என்று கேட்டபின், ஊசி போட்டபின், சிறிது மன இறுக்கம் குறைகிறது. பரிசீலனைக்கு ஆறு ரூபாய் கேட்கிறார்கள். நீரும் இரத்தமும்