பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 113 கொடுத்துவிட்டுத் திரும்புகையில் களைப்பாக இருக்கிறது. வடிவு வந்தால் மறுபடியும் இரண்டு ரூபாய் செலவு பண்ணிக்கொண்டு சங்க அலுவலகத்துக்குப் போய்விடலாம். இவனுக்காக ஐயர் சாப்பிடாமல் காத்திருக்கிறாரோ?. அவருடைய குடும்ப நிலைமையை உணர்ந்துகொண்ட பின் அங்கு தங்குவது சரியாகப்படவில்லை. வடிவு இந்த வழியாகத்தான் போகவேண்டும் என்பதை எதிர்பார்த்து, அங்கேயே திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். காலை நேரத்தின் வரையறை முடிந்து கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு அங்கிருந்த ஆள் போகிறான். இவர் வெற்றுத் திண்ணையில் பொருந்தாமல் அவன் வரும் வழிநோக்கி இருக்கையில் வடிவு சிரித்துக்கொண்டே மறுபுறம் இருந்து குரல் கொடுக்கிறான். "என்ன மொதலாளி, இங்க உக்காந்திருக்கீங்க?" '. வடிவு, ஒரு ரிச்சா கூட்டிட்டு வா, சங்க ஆபீசுக்குப் போயிருவம். இங்கியே தங்கிப் பார்க்கணும்னு சொன்னாங்க." "அப்ப.?” "நீ என்னக் கொண்டுவிட்டுப் போட்டு, ஊருக்குப்போ, நாளக்கிச் சம்பா ஒழவு ஆரம்பிச்சிடணும்னிருந்தேன்." "அதெல்லாம் நாம்பாத்துக்கிற முதலாளி நீங்க நல்லா கவனிச்சிட்டு வாங்க ஊசி போட்டாங்களா?” "ஆமா. ஒண்ணும் பயமில்ல. இரண்டு முனு நாளில நல்லாயிடும்னாங்க. ஐயிரு அண்ணம் மக தானே? நல்லபடியா கவனிக்கிறாங்க. இது ஒரு வயசுக்குளந்த, தேரு பாக்க வரும். இப்ப. எத்தினி உசரம் போயிட்டாங்க." "ஐயிரப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்!...” வடிவு அவரை வண்டியில் ஏற்றிவிட்டு, ஒட்டலில் சென்று எலுமிச்சைச்சோறும் தோசையும் பொட்டலமாக வாங்கிக்கொண்டு போய் அலுவலகத்தில் கொடுக்கிறான். அலுவலகத்தில் பொன்னடியானில்லை. அவன் எங்கோ வகுப்பெடுக்கச் சென்றிருக்கிறானாம். காவலாக ஒரே ஒரு ஆள் மட்டும் இருக்கிறான். விசாலமான கூடம் இருக்கிறது. சுருட்டி வைத்திருக்கும் பாயொன்றை எடுத்துப்போட்டு அமர்ந்து கொள்கிறார் சம்முகம். Ho "அம்மாட்ட சொல்லு. மடைபாத்துத் தண்ணிவுடு. சே -8