பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 117 போலீசு வந்து அடிச்சி உள்ள தள்ளு வா. ஒண்னும் இல்லமலேயே இவனுவ சந்தேகம்னு புடிச்சிட்டுப் போயி வாக்கரிசி வாங்கிக்கறாங்க...” "உங்க சங்கம் பின்ன என்னதா செஞ்சிட்டிருக்கு?” "போன வருசத்துக்கு இந்த வருஷம் கூலி உசந்திருக்கில்ல?" "அது சரிதா. இருந்தாலும் பல உரிமைகளை விட்டுக் குடுக்கிறோம். சின்னச் சின்னப் பிரச்னைபோல தெரிஞ்சாலும் எல்லாரையும் கூட்ட அதுதான் உதவி செய்யும்.” "அது சரிதாங்க. இப்பக் கூட, காலம குடிசயப் பேத்திடுவோம்னு பூசாரி பயமுறுத்திட்டுப் போறான். முதலாளி புதுக்குடில படுத்திட்டாரு...” கு.பிரென்று தேவு சிரிக்கத் தொடங்கி அடக்கிக் கொள்கிறான். н “என்னங்க...?” "இல்ல, நீ முதலாளின்னதும் சிரிப்பு வந்தது. இவனுக்கும் வெட்கமாக இருக்கிறது. "முதலாளின்னு கூப்பிட்டுப் பழக்கமாயிடிச்சிங்க. நம்ம எனத்துல, சொந்தமா அஞ்சுமா வச்சிட்டு ஒரு தலவரா இருக்கிறவர நாம முதலாளின்னு கூப்பிடுறது கவுரததானுங்களே?" ". இப்பத்தா எனக்கு நல்லாப் புரியுது. நம்ம சனங்களுக்கு தாங்க ஒரு முதலாளியா, மிராசா, சமீனா இருக்கனும், நமக்குக்கீழ நாலுமனுசன் கைகட்டி சேவுகம் பண்ணனும்ங்கற உணர்வு ரெத்தத்தோட ஊறிப்போயிருக்கு. பொது உடமைச் சித்தாந்தமெல்லாம் பேசி ஊறினாக் கூட, தனக்குன்னு வாரப்ப, எந்த மனுசனும் பொஞ்சாதியையேனும் குறைஞ்சபட்சம் அடிமைன்னு நினைச்சி அதிகாரம் பண்ணாம இருக்கிறதில்ல. தாங்க ஒரு உடமைக்காரராக இல்லாத நிலையிலதான் சித்தாந்தம், வேதாந்தம், எல்லாம்.” தலைவனை விமரிசனம் செய்வது என்பது ஒத்துக்கொள்ளமுடியாத வரம்பாக ஊறிப்போயிருக்கிறது. எனவே வடிவு அவன் பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. "நீங்களும் எத்தினி வருசமா உழைக்கிறீங்க? உங்கப்பாரும் அடிதடி, சிறைவாசம்னு எத்தினி கஷ்டப்பட்டிருக்காரு இன்னும் ஒரு சாண் நிலம் சொந்தமாக வச்சிக்கமுடியல. இவங்க கோயில்ல சாமில்லன்னு சொல்றப்ப நீங்க கும்பிடக்கூடாது; ஏத்துக்கணும்.