பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 119 அந்த சமயங்களில் நிலத்தைப் பார்த்துக்கொள்ளத் தங்கிவிடு வான். இப்போது சில நாட்களாகத்தான் சில்லறை சச்சரவுகளில் சிக்கிக்கொண்டு காவல் நிலையங்களைப் பார்த்து வருகிறான். சில மாசங்களுக்கு முன்பு இப்படித்தா ன் ஒரு நாள் சாயங்காலம் குடித்துவிட்டுத் தெம்மாங்கு பாடிக்கொண்டு போனான். நடவு, உழவு எதுவும் இல்லாத நாட்கள். உளுந்து பயிறு பிடுங்கிய பின் தரிசாகக் கிடந்தன. இவனுக்கு அன்று கையில் கொஞ்சம் காசு கிடைத்திருந்தது. லீவுக்கு வந்திருந்த ஐயர் மகன் கொடுத் திருந்தான். அஸ்தமங்கலத்துக்குச் சினிமாவுக்குப் போவதாக எண்ணிக்கொண்டு புறக்காவல் நிலையத்துக்கு முன் சென்று கொண்டிருந்தான். ஐயர் மகன் சிவப்புக் கட்டம்போட்ட புதிய தேங்காய்ப் பூத்துவாலை ஒன்றும்அவனுக்குக் கொடுத்திருந்தான். அதைத் தலையில் கற்றிக்கொண்டிருந்தான். - ஏட்டையா அவனைக் கைக்குச்சியால் ஒரு தட்டுத் தட்டினார். “ஏண்டால? என்னா சமாசாரம்?... எங்கடா வந்து ஆட்டம்போடுற?" என்றார். அப்போது இம்மாதிரி பப்ளிக்காக கள்ளுக்கடைகள் திறந்திருக்கவில்லை. தோப்பில் தான் ஊறல் விற்பார்கள். ஆனால் எல்லோரும் குடிப்பதுதான் அப்போது அவனைப் பிடித்ததற்கு காரணம் என்று நினைத்தான். "இல்ல. சாரு...” என்று குழறினான். ஏட்டு அவன் தலைத்துண்டைப் பற்றி இழுத்தார். 'இன்னாடா சேப்புத் துண்டு போட்டிருக்கிற?. கம்னாட்டிப் பயலே." என்று திட்டி முதுகில் நான்கு சாத்தினார். "ஐயோ. இல்லீங்க.." "குடிச்சிட்டு வந்து டேசன் முன்ன ஆட்டம் போடுறான். இன்னாடா தயிரியம்?.” "இல்லிங்க சாரு இல்லிங்க தெரியாம வந்திட்டேன்." 'ஏ ண்டால, சேப்புத் துண்டு போட்டிருக்கிறியே, புரட்சின்னா இன்னான்னு தெரியுமாடா?” "தெரியும் சாரு புரட்சின்னா சாஸ்தி கூலி வரும். நல்லா இருப்போம். அதுக்குத்தான் போராடுறம்.” "அட போடா முட்டாப்பயல? போயி உந் தலவரிட்டக் கேளு!” என்று புதிய துண்டை உருவிக்கொண்டு அவனை விட்டார். அன்று வந்ததும் முதல் வேலையாகச் சம்முகத்திடம்