பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12O சேற்றில் மனிதர்கள் "புரட்சின்னா என்ன முதலாளி? சரியாச் சொல்லுங்க!” என்று கேட்டான். சம்முகம் நடந்த விவரங்களைக் கேட்டுவிட்டு அவனுடைய கபடமற்ற தன்மைக்குச் சிரித்துக்கொண்டார். "நீ முதலாளின்னு கூப்பிடக்கூடாது, முதல்ல!” میسی "புரட்சி என்றால் என்ன? என்று தலைப்பிட்ட ஒரு சிறு புத்தகத்தைக் கொடுத்தார். “எளிமையா எழுதிருக்கு பாரு, படிச்சித் தெரிஞ்சிக்க, நா வந்து கேப்பேன், சொல்லனும்!” என்றார். ی” இவனுக்குப் படிக்க வணங்குவதில்லை. எழுத்துக் கூட்டி அந்தச் சிறு பிரசுரத்தில் நான்கு பக்கங்கள் படித்தான். பிறகு அப்படியே போட்டுவிட்டான். அது மறந்தே போயிற்று. தேவு அவன் வழிக்குப் பிரிந்துபோகிறான். வடிவு முதலாளியின் வீட்டுக்கு வருகிறான். வீடே ஒய்ந்து கிடக்கிறது. அம்சுவும் லட்சுமியும் கன்னத்தில் கைவைத்த வண்ணம் உட்கார்ந்திருக்கின்றனர். கிழவன் படுத்துக் கிடக்கிறான். கிழவியைக் காணவில்லை. பைத்தியக்காரப்பயல் உள்ளே கதவைத் தட்டி ஊளையிடுகிறான். - “...காந்தி வரலிங்களா?” "ஆரு? வடிவா? முதலாளி வரல?..." "அவங்க ரெண்டு நா தங்கி ஊசி போட்டுக்கிடணுமா. நீர், ரத்தம் பரிசோதனை பண்ணிருக்காவ. இந்தாங்க, பூச்சி மருந்து, உள்ளாற வாங்கி வையுங்க...” சட்டைப்பையில் கைவிட்டு அவர் கொடுத்த பணத்தில் மீதிச் சில்லறையையும் பூச்சி மருந்து-பில்லையும் எடுத்துக் கொடுக்கிறான். =" "ஐயிரு வீட்டுக்குப் போனாங்களா, சருக்காராசுபத்திரிக்குப் போனாங்களா?” "ஐயிரு வீட்டுக்குத்தா...' “ஏண்டா, புதுக்குடிக்கு சினிமாக்குப் போனதா வா ஒடயாரு சொன்னாரு?" "-2, Lот...” “நீ காந்தி வந்திச்சான்னு கேக்கலியா?” "நா எல்லாம் எங்கன்னே. சினிமா போயிருக்காங்கன்னு சொன்னாரு சரி, காந்தியும் போயிருக்கும்னு சொன்னே.”