பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 121 "மக்குப் பயல்ங்கறது சரியாயிருக்கு." லட்சுமி முணமுணத்துக்கொண்டு உள்ளே போகிறாள். சொல்லத் தெரியாமல் சங்கடம் செய்கிறது. இந்தப் பெண், அத்துமீறி ஒடிவிட்டாளா? * வடிவு அங்கே பிறகு தாமதிக்கவில்லை. நிலவு எழும்பும் காலம்தான். எனினும் நீர்ச்சாரல் விசிறும் மேக மூட்டத்தில் நிலவின் கவர்ச்சியில்லை. எதிரே வருபவர் முகம் விளங்காத மங்கல் மருதனும் பொன்னனும் குடித்துவிட்டு அதே குரலில் கூலிப்பிரிவில் சச்சரவு செய்வது கேட்கிறது. அவன் விரைந்து குளம் சுற்றிப் போகிறான். ஏதோ நடவாதது நடந்திருப்பது தெரிகிறது. அங்கே ஒரு பஞ்சாயத்து விளக்குண்டு. கோயில் வாசலில் மணல் இறங்கியிருக்கிறது. சவுக்குத்தடிகள் இறங்கியிருக்கின்றன. இடுப்பில் பட்டை வேட்டியும் கழுத்தில் உருத்திராட்சமுமாகப் பூசாரி நிற்கிறான். மணியகாரர், மூலையான். பின்னே. ஐயோ? அவர்கள் வீடு. குடிசை என்ன ஆச்சு? முட்டுமுட்டாக அரைச்சுவர்கள் மட்டுமே மானங் குலைக்கப்பட்ட நற்குடிப் பெண்கள்போல் நிற்கின்றன. பஞ்சமி செய்வதறியாது நிற்கிறாள். அவளுடைய தாய் காளியாயி மாரியாயி எல்லாரையும் கூவி அழைத்து அக்கிரமத்தைப் பார்க்கச்சொல்லி முறையிடுகிறாள். போலீசை வைத்துக்கொண்டு பிரிக்கச் சொன்னார்களாம். அப்பன் மூங்கில்கள், பொடிந்த கீற்று எல்லாவற்றையும் பிரித்துக்கொண்டிருக்கிறான். அமாவாசி கட்டாகக் கட்டித் து.ாக்கிச் செல்கிறான். குஞ்சு குழந்தைகள், ஆடு, கோழி நாய், சட்டி பானை, முறம், உரல் உலக்கை எல்லாம் அவன் முன் அநாதைகளாக நிற்கின்றன. துரங்கும் எரிமலையை ஏற்கெனவே தேவு தொட்டுப் பார்த்திருக்கிறான். இப்போது அது புகையையும் குழம்பையும் கக்குகிறது. வசையும் குரலும் மூர்க்கமாகப் பாய்கின்றன. "யார்ராவன் தேவடியாமவன் எங்க வூட்டப் பிரிச்சது?” கொடியேறிய அவரை தரையில் வீழ்ந்து புல்ம்புகிறது. படல்கட்டு இவர்கள் குடிசையைச் சுற்றிப் புதிதாக வளைத் திருந்தார்கள். அதை அகற்றவில்லை இன்னமும். உடம்பிலி ருக்கும் சாரமனைத்தும் நடந்தும் ஒடியும் வெட்டியும் கொட்டி யும் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் நிம்மதியாகப் படுக்க,