பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சேற்றில் மனிதர்கள் உட்கார்ந்து பசியாற, அடிநிலம் சொந்தமில்லை, உரிமையில்லை என்று உரைத்துச் சொல்கிறார்கள். இந்த மண்ணைத் தவிர அவர்களுக்கு வேறு பாத்தியதை கொண்டாட எதுவும் நெருக்கமில்லை. ..ھی" பல்லைக் குத்திக்கொண்டு விருத்தாசலம் பிள்ளையும் நிற்கிறார். "ஏங்க, இது நாயமா உங்களுக்கு? வாழுறவங்க வூட்டப் பிரிச்சிப்போட்டு சாமி உங்களக் கும்பிடச் சொல்லிச்சா! அந்த சாமிக்குக் கண்ணில்ல?” "யார்ராது? வடிவுப் பய வந்திட்டானா? என்னாடா... பேச்சு தடிக்கிது?” "ஆமா, தடிக்கத்தா தடிக்கும். வாழுறவங்க குடிசயப்பேத்து மானங்குலக்கச் சொல்லிச்சா ஒங்க சாமின்னு கேட்டேன்?” "பறப்பயலுக்கு வந்த திமிரப் பாத்தீங்களா? ஏண்டா நீங்க கோயில் நிலத்தில் இருந்துகிட்டுக் கண்ட மாமிசத்தையும் உரிச்சிப் போட்டுக்கிட்டு அக்கிரமம் பண்னது மில்லாம, நாக்குமேல பல்லப்போட்டு எதித்துக் கேக்க வந்திட்ட போனாப் போகுதுன்னு இத்தினி நா வுட்டதுக்கு எங்க புத்தியதா சொல்லணும்?” "நடவு வேலயெல்லா ஆனபெறகு நாங்க போயிடறோம்னு தான சொல்லிட்டிருந்தோம்? அதுக்கின்னு இப்ப பிள்ளையும் குட்டியுமா நிக்க வச்சிட்டு வூட்டப் பிரிச்சது நாயமான்னு கேக்குறேன். நாங்களும் உங்களப்போல மனிசங்கதானே? உங்கூட்ட இப்படிப் பிரிச்சிப் போட்டா சும்மா இருப்பீங்களா?” "கேட்டிங்களா இந்தத் திமிர் பிடிச்சவன், வாதாடுறத? ஏண்டா? உங்க தலைவன் கிட்ட ஆறுமாசத்துக்கு முன்ன நோட்டீசு குடுத்து, அப்பப்ப சொல்லிட்டே வந்தேன். மரியாதையா பிரிச்சிட்டுப் போனிங்களா? சாமிக்கு விழா எடுக்கணும்னா அததுக்கு நாளு நட்சத்திரம் இல்லியா? உங்க இட்டத்துக்குத் தள்ளி வச்சிக்கிறதாடா? முட்டாப்பயல?” 'பத்து வருசமா ஒண்னுமே செய்யாம தள்ளிப் போட்டீங்களே? ஆரக் கேட்டீங்க அதுக்கு?” "எதித்து எதித்துக் கேக்கற நீ? மூஞ்சி முகர பேந்து பூடும்! என்னடா துள்ளுற? நீ சொல்லியாடா நாங்க சாமி கும்புடனும்?" குப்பன் வந்து மகனைப் பின்னுக்குத் தள்ளுகிறான்.