பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சேற்றில் மனிதர்கள் 'யம்மோ..!" இடுப்பில் பிள்ளையும் தலையில் பாய்ச்சுருட்டும் கோணியுமாகப் பஞ்சமி. 'வீட்டெல்லாம் போல்சு வந்து பிரிக்கச் சொல்லி ட்டாங்கம்மா!...” லட்சுமி குரல் கேட்டு வெளிவருகிறாள். அம்சுவும் எட்டிடப் பார்க்கிறாள். குப்பன் எல்லாவற்றையும் விவரிக்கிறான். 'கேடு வந்திச் சின்னா ஒரே முட்டாத்தான் வரும். என்னாத்துக்குன்னு அழுவ?” வடிவு வரிக்கம்பு, ஒலை எல்லாவற்றையும் கட்டி எடுத்து வந்து வீட்டுப் பின்புறத்தில் வைக்கிறான். இரண்டு ஆடுகள், ஒரு கோழி, எல்லாம் பின் தாழ்வாரத்தில் இடம் பெறுகின்றன. அன்று லட்சுமி அடுப்பு மூட்டிச் சோறு பொங்கியிருக்க வில்லை. இப்போது இந்த எதிர்பாரா விருந்தைச் சாக்காக்கி அம்சு அடுப்பைப் பற்றவைத்து உலை போடுகிறாள். திண்ணை ஒரமிருந்த கலப்பை, சாக்கு போன்ற சாமான்களைப் பின்புறம் கொண்டு வைத்து வாயிலின் மறு திண்ணையில் குப்பன், மாரியம்மா, பஞ்சமி எல்லோருக்கும் இடம் ஒதுக்குகிறாள். வீட்டில் நிலவிய சோர்வையும், சங்கடமான அமைதியையும் இந்த இடையீடு நீக்குகிறது. நாகு பஞ்சமியின் குழந்தையைப் பார்த்துவிட்டுக் குதிக்கிறான். "ஐயா. பா.ப்பா. கொழ்ழா..." என்று கையை நீட்டி ஆர்ப்பரிக்கிறான். "ஆமா. புள்ள ஒண்னுதா கொறச்ச.” கிழவி முணுமுணுத்தாலும் பஞ்சமி அவன் மடியில் குழந்தையை வைக்கிறாள். சூடுபரக்க எல்லோருக்கும் அம்சுதான் சோறும் குழம்பும் வைத்துத் திண்ணையில் கொண்டு கொடுக்கிறாள். அவளுடைய பாட்டன் விருத்தாசலம்பிள்ளை வகையறாக்களை வசை பொழிந்துகொண்டே சோறுண்ணுகிறார். லட்சுமிக்கு ஒரு கவளம் எடுக்கக்கூட மனமிறங்கவில்லை. "காலமேந்து ஒரு பருக்கயில்லாம இருக்கிற, என்னம்மா இது?”