பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 125 கடிந்துகொண்டு இரண்டு வாய் உண்ணச் செய்கிறாள் ԼD I, TIT - குப்பன் சாம்பாருக்குச் சோறுவைத்துக் கொடுக்கையில் வடிவு இன்னமும் சுமை சுமந்து வருகிறான். பனந்துண்டம், குந்தாணி, எரு முட்டை என்று தட்டுமுட்டுக்கள் வீடு குலைந்ததும் வளர்ந்து வருவதுபோல் நீளுகின்றன. இறுதியாகக் காத்திருந்து அம்சு அவனுக்குச் சிறு விளக்கை வைத்துச் சோறு படைக்கிறாள். அந்த இடிபாடுகளின் இடையிலும் அம்சுவின் முகம் எதிர்கால நம்பிக்கையாக உணர்வூட்டுகிறது. 'போதும், போதும்...' என்று அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவன் மொழிந்தாலும், கைகளும் மனமும் வேறொரு கோணத்தில் பரபரக்கின்றன. பின் தாழ்வரையில் ஆடு, கோழிக் கூண்டு, எருமுட்டை, அடுக்கு ஆகிய தட்டுமுட்டுக்களுக்கிடையில் பீடி குடித்துக் கொண்டு அவன் உட்காருகிறான். துாற்றல் விழுகிறது. உழவுமாடுகள், ஒரு கறவை வற்றிய மாடு, கரைந்துவிட்ட சிறு வைக்கோற்போர், அப்பால் எருக்கிடங்கு என்று கொல்லையில் ஒவ்வொரு சதுர அடியும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாகு அறைக்குள் செல்ல மறுக்கிறான். லட்சுமி சிறிது நேரம் போராடிவிட்டுக் கோடியில் அவன் அறைக்குள் தள்ளிக் கதவைச் சாத்துகிறாள். பின்னர் நடுவிட்டுக் கதவையும் சாத்திவிட்டு அம்சுவும், லட்சுமியும் படுத்துக் கொள்கின்றனர். "ராத்திரி காபந்தா இருக்கணும். இந்தப் பயலுவ மாட்டப் பத்திட்டுப்போனாலும் போவானுவ வேற என்னமே அடாவடியாச் செஞ்சாலும் செய்வானுவ." தெருத்திண்ணையில் முடங்க இருக்கும் அப்பனைத் தட்டி எழுப்பி, 'பின்னால போயி இரு நா வயப்பக்கம் ஒரு சுத்துப் போயிவார வேணுமின்னு மாட்ட ஆட்ட வுட்டு மேயச் சொல்லுவானுவ!” அம்சுவுக்கு உறக்கம் கொள்ளவில்லை. இந்த மழையிலும் துாற்றலிலும், கொழுந்து விட்டெரியும் மேற்குடிப்பகையிலும் அவன் இருட்டில் ஏன் போகவேண்டும் என்றிருக்கிறது. "யம்மோ..! அத்த இப்பப் போவாணாம்னு சொல்லு...!"