பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சேற்றில் மனிதர்கள் "உனக்கென்னடி அத்தினி கரிசனம் அவனவனப் பத்தி? அவனவன் கவலப்பட மாட்டானா?” "இல்லம்மா, ஊரு கெட்டுக்கிடக்கயில, இந்தாளும் கோவத்தில எதானும் அடாவடியாப் பழி பாவத்துக்கு ஆளாறாப்பல எதேனும் செஞ்சிட்டா?” லட்சுமிக்குச் சுருக்கென்று தைக்கிறது. நேரம் பற்றாமலி ருக்கிறது. இவன் தன் கோபத்தைக்காட்ட அவர்களுடைய வயல்களில் மாட்டை விட்டோ, மடையை அடைத்தோ, வைக்கோலை நாசம் செய்தோ பழிக்காளாகலாம் இல்லையா? தேனிக் கூட்டில் தீயை வைத்து ஒட்டித் தேனைக் கவர்ந்து கொள்ளும் ஆதிக்க மனிதனைப்போல் அவர்கள் ஆள்கட்டு, அதிகாரம் எல்லாம் உடையவர்களாக இருக்கின்றனர். இந்தக் குடிசை பெயர்த்தல், பிணம் துக்க இடம் கொடுக்கமாட்டோம் என்று மறுத்தது, எல்லாம் கவனிக்கப்படாமல் போகாது. வரும் மாசம் சங்கத்தின் பெரிய கூட்டம் இருப்பதாகவும், பல பிரச்னைகளை முன்வைத்துப் பெரிய போராட்டம் நடத்த இருப்பதாகவும் சம்முகம் சொல்லியிருக்கிறார். எனவே, எதிராளி பலமறியாமல் இவன் எதையேனும் செய்துவிட்டு, நமது ஒற்றுமைப் பலம் சிதறிவிட வாய்ப்பு வரக்கூடாதே?. லட்சுமி கதவைத் திறக்கிறாள். "வடிவு...? எல வடிவு...?” சிம்னி விளக்கைப் பெரிதாக்கிப் பார்க்கிறாள். குப்பன் சாம்பார்தான் கோழிக்கூட்டுக்கும் வறட்டிக் குவியலுக்கும் நடுவே, சாக்கு விரிப்பில் சுருண்டு குறட்டை விடுகிறான். வாயிற் கதவைத் திறந்து திண்ணையில் பார்க்கிறாள். "என்னாடி?...” "வடிவுப் பயல வெளியில எங்கும் ராவுல போவானாம்னு சொல்லத்தா.” "அவ ஆயிப்பனுக்கு இல்லாத அக்குசு ஒனக்கென்னடி? தென்ன மரத்துல தேளு கொட்டி பன மரத்துல நெறி ஏறிச்சாம்? பெரும்பண்ண, மிராசுன்னு அந்தச் செறுக்கி நினைப்பு. கமுக்கமா கதவச் சாத்திட்டுப் படுங்க போயி..." கிழவியின் எரிச்சல் புரிகிறது. இவர்களுக்கு இடம் கொடுத்தது மட்டுமில்லை. அம்சு சோறு வடித்துப் போட்டது பிடிக்கவில்லை. - பொழுது உறக்கமில்லாமலே கழிகிறது.