பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சேற்றில் மனிதர்கள் பத்துருபாய் நோட்டுகளாகப் பத்தை அவளிடம் எண்ணிக் கொடுக்கிறார். "உன் கைப்பையில வச்சுக்க, பத்திரம். உங்கம்மாளக் கூப்பிடு?” லட்சுமி இட்லியைத் தட்டுகையில் கொல்லைப் புறத்துத் தாழ்வாரத்தில் தடுத்த அறைக்கதவை உள்ளிருந்து நாகு உடைக்கிறான். "அம்சு கதவைத் திறந்து நாகுவ வெளியே கூட்டிட்டுப் போயிட்டுவா!' என்று சொல்லிக்கொண்டு வந்து எட்டிப் பார்க்கிறாள். "இதபாரு, நான் நூறு ரூபா எடுத்திட்டுப் போறேன், இன்னிக்கோட மூங்கித் தோப்புக்குப் பக்கத்திலிருக்கிற பங்குல நடவ முடிச்சிடணும்னு சொன்னான் குப்பன். இதோ எம்பளது ருபா வச்சிருக்கிறேன். கூலிக்கு எடுத்துக்க நான் இவ இண்டர்வியூ முடிஞ்சதும் நேரா புதுக்குடி வந்து காலை டாக்டர்கிட்டக் காட்டிட்டு வரலாமின்னிருக்கிறேன். வெளயாட்டுப் போல இன்னிக்கு மூணு நாளாவுது. நேத்தே ரதவீதிக்குப் போய் ஐயரப் பாக்கனும்னு நினைச்சேன். எங்க போக முடியுது?. பறிச்ச நாத்துக்கட்ட எல்லாம் நேத்து வச்சாச்சா, இன்னுமிருக்கா?” "கெடக்கு காவாயிலே மாலகட்டில்ல இளுத்திட்டுப் போவணும்?” 'இன்னிக்கி என்னவோ சொல்லிக்கிறாவ, வடிவு வாரானோ இல்லையோ? சாம்பாரு நேத்தே துட்டிக்குப் போயிட்டான். நேத்தே முடிச்சிருக்கணும். மூணுமணிக்கே அல்லாம் கரையேறிப் போயிட்டாளுவ..." - "இந்தத் தொர இன்னிக்கு ஊருக்குப் போறாராமா?" "அதொண்ணும் நா கேக்கல. காந்தியக் கூட்டிட்டுப் போறியான்னேன். அவுரே போகட்டுமின்னா..." "அணிப்புள்ள, தென்னம்புள்ளதா..." முணுமுணுத்துக்கொண்டு பெட்டியைச் சாத்துகிறார். பின்புறம் நாகு எதற்கோ ரகளை செய்கிறான். மனதில் இருப்பதை ஆழமாக வெளியிடத் தெரியாததால் கொட்டும் குழம்பைப்போல் குரல் ஒலி சிந்தி ஒடும் நாராசம். காலை நேரத்தில் இந்த ஒலியைக் கேட்டாலே இவருக்கு இப்போதெல்லாம் பொறுமை குலைந்துபோகிறது.