பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சேற்றில் மனிதர்கள் போலும், அங்கே ஒதுங்கிப் பாவங்களாக நிற்கும் கிய மத்துப் பெண்கள் இவளைக் கண்டு வணக்கம் தெரிவிப்பதுபோலும் ஒரு கற்பனை. - "நம்ம கிளியந்துற சம்முக வாய்க்காரு மகதா ஆட்டவுட்டுப் போயி, டாக்குட்டரா படிச்சி வந்திருக்கு" என்று அவர்கள் சொல்லிக்கொள்வார்கள். அதிசயிப்பார்கள். சீக்குக் குழந்தைகளை யும், கிழவிகளையும் தான் தொட்டுப் பார்த்து வைத்தியம் செய்வதுபோலும், தன் பாட்டியும் அங்கு வந்து நின்று அவளை முகத்தைத் தடவி திருட்டி சொடுக்குவது போலும் ஒரு கற்பனை - "நீங்க அநாவசியமா விரோதம் பாராட்டிக் கோவிச்சிட்டீங் கப்பா, ஊரிலியே கெடந்திருந்தா நா இப்படி முன்னுக்கு வந்திருக்க முடியுமா?...” * 'தப்புதாம்மா, நீ செயிச்சிட்டே" என்று தந்தை ஒப்புக் கொள்வது போல் ஒரு காட்சி. "இனிமே என்னாடா சம்முகம்! சம்பந்தியாயிட்டே அவனவின் சவுரியத்துக்குத்தான் எல்லாமே, அந்த குடிசயில நீ என்னாத்துக்கு இருக்கணும் இனிமே? புரட்சி கிரட்சி எல்லாம் வெறும் பம்மாத்துப் பேச்சு. நம்ம முதல்ல கவனிச்சுக்கணும். அதுக்குப் பிறகுதா சமுதாயம், தேசம் எல்லாம். நீ நல்லா சந்தோசமா இருந்தாத்தானே பிறத்தியானுக்கு எதானும் செய்யமுடியும்?..." இப்படி ஒரு கற்பனை. ஊஞ்சற்பலகையில் அமர்ந்து காந்தி தனது புகுமுக வகுப்புப்பாடங்கள் பற்றிப் பல்கலைக் கழகத்துக்கு எழுதி விசாரிக்கவேண்டும் என்று சாலியிடம் கேட்பதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில் அவனே வருகிறான். “காந்தி. அப்பாக்கு, அம்பேத்கார் முன்னேற்ற சங்ககாரங்க ஒரு பாராட்டு நடத்தறாங்களாம். அவருடைய சேவையைப் பாராட்டி, பலரும் பேசுறாங்க. உன்னையும் மேடையிலேத்த ணும்னு எனக்கு ஆசை.” அவளுக்கு இனம் புரியாததொரு நடுக்கம் பரவுகிறது. "வாணாங்க...” "ஃபூல் என்ன வானாங்க? அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவை செய்தார். அந்த வழியில் இவரும் சேவை செய்கிறார்னு பேச வேண்டியதுதான். உனக்கு எப்படிப்