பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 13 “ஏண்டி அந்தப்பயலக் காலங்காத்தால கெளப்பிவிடுறிங்க!” "இல்லப்பா, கால் கழுவாம உள்ளாற ஒடியாறான், கசம். தண்ணிய ஊத்தினேன்.” லட்சுமி சென்று அவனை இழுத்துக்கொண்டு வந்து அடுப்பின் பக்கம் உட்கார்த்திக் கொள்கிறாள். குரல் ஒய்கிறது. ஒழுங்காக இருந்திருந்தால், ஏரோட்டுவதற்கு ஆளைத் தேடவேண்டாமே? படிப்பு இல்லாதபோனாலும், ஒரு ஆள் என்ற வலிமையேனும் இருக்குமே? எதற்கும் பயனில்லை, ஒரு சுமை. இந்தச் சுமையை அன்று வயிற்றில் மட்டும் சுமக்கவில்லை. கால் நூற்றாண்டாய் இன்னும் சுமக்கிறாள். நடுவீட்டில் பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக் கிடக்கும் தலைமகனைப் பார்த்து முகத்தைச் சுளித்துக்கொண்டு மாடத்திலிருக்கும் சிறு கண்ணாடி பார்த்துத் தலை வாரிக் கொள்கிறார். சாமி கும்பிடுவது வழக்கம் விட்டுப் போனாலும், மரவையிலிருந்து துளி திருநீற்றைப் புருவங்களுக்கிடையில் வைத்துக்கொள்வது விட்டுப்போகவில்லை. லட்சுமி மிளகாயையும் உப்பையும் அம்மியில் வைத்து நசுக்கித் துவையல் அரைத்துக்கொண்டிருக்கிறாள். நாகு அடுப்படியில் ஒரு நீண்ட குச்சியை வைத்துக் கொளுத்தி வெளியே எரிய விடுகிறான். பளாரென்று அவன் முதுகில் ஒர் அறை விழுகிறது. அவனுடைய அழுகைப் பின்னணியில் அவர் கத்துகிறார். "இந்தப் பய ஒரு நா குச்சி கொளுத்திக் கூரையில போட்டுடப்போறான். அவன அடுப்படிலே குந்தவச்சிட்டு ஏன் போlங்க?" i. “காந்தி எங்க? அவளப் பாத்துக்கச் சொல்லிட்டுப் போனேன்?" இரண்டு இட்டிலியும், சுக்கும் வெல்லமும் போட்ட தேநீரும் அருந்தி விட்டு வெளிக் கிளம்பும்போது, பாட்டி வாயலில் குந்தியிருக்கிறாள். வலப்புறத்துத் திண்ணைதான் பாட்டி பாட்டன் இருவருக்கும் இருப்பிடம் தேய்த்துப் போட்ட தேங்காய் நாராகக் கூந்தல் பசையிழந்து போயிருக்கிறது. எண்ணற்ற சுருக்கங்களுடைய முகத்தில் கண்கள் இன்னமும் கூர்மையாக இருக்கிறது. இந்தக் குடியினரிடையே அபூர்வமாகத்