பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 - சேற்றில் மனிதர்கள் பலமனைத்தையும் திரட்டி அந்த முகத்தை விலக்கப் போராடு கிறாள். சாலிக்கு இத்தனை பெரிய முகமுமில்லை, இம்மாதிரியான மீசையுமில்ல. "சி, போ! யாரு நீ?." அவன் சிரிப்பு அசிங்கமாக இருக்கிறது. "தெரியலயாடி உனக்கு இன்னும்?” "சீ போயிடு! இல்லாட்டி இப்பக் கத்திக் கூச்சலிட்டு ஊரக் கூட்டிடுவேன்!" “உங்கூச்சலுக்கு இங்க யாரும் வரமாட்டாடி பத்தினித் தங்கம்! ஆனானப்பட்ட மேச்சாதிப் பொண்ணுகளே, இந்த மன்னனுக்கு மசிஞ்சு வருவா. அரிசனச் சிறுக்கி, என்னாடி எகிறற?...” == "அட... பாவி?” 'ச், அழுது ஊரக் கூட்டாத உன்ன முன் னுக்குக் கொண்டாரணும்னு சாலி சொன்னான். புத்தியா இரு. ஏங்கிட்ட வந்த எந்தச் சிறுக்கியும் நடுத்தெருவில நிக்கமாட்டா...” அவள் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள். அவளுடைய கனவுகள், கபடமறியாத கற்பனைகள் எல்லா வற்றையும் தகர்த்தெறிந்து தூய்மை என்று போற்றக் கூடியதொரு மரபை உடைத்து அவளைப் படுகுழியில் வீழ்த்தி விட்டதான உணர்வை அளித்துவிட்டுப் போகிறான். கண்ணாடியில் தெரியும் தன் முகம் மிகவும் கோரமாக இருக்கிறது அவளுக்கு விம்மி இதயம் உடைய அழுகிறாள். தனது மாயக் கனவுகள் இப்படிக் குலைக்கப்பட்டதை எண்ணி எண்ணித் தேம்புகிறாள். காதலனாகக் காட்சி அளித்தவன் கயவனிலும் கயவன் என்று கண்டு பொங்கிக் குமுறுகிறாள். வெய்துயிர்க்கிறாள். அவள் இந்த நாட்களில் படித்த கதைகளில் சினிமாக்களில் வரும் கற்பழிக்கப்பட்ட நாயகிகளில் ஒருத்தியாக ஆகி விட்டாளே? ஒட்டலில் விஷமுண்டு செத்தவர்கள், ரயில் தண்ட வாளத்தில் கிணற்றில், ஆற்றில், கடலில். உயிர்விட்டவர்கள். அவளும் உயிர்விடத்தான் வேண்டுமா?