பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சேற்றில் மனிதர்கள் 'வூட்டவுட்டு வந்ததுக்குச் சரியான பாடம் கத்துக் கிட்டேன். அவம் மீசையும்அவனும் ஐயோ...?” - நெஞ்சு வெடிக்கத் துயரம் பீறிடுகிறது. "ஷ, அழாதே காந்தி." என்று அவளை மென்மையாக முகத்தைப் பிடித்துச் சமாதானம் கூற வருகிறான். "இப்ப என்ன ஆயிடிச்சி? ஒண்ணில்ல. போயி குளிச்சிட்டு வாடா, கண்ணு. கற்பு கற்புங்கறதெல்லாம் பொண்ணுகளைத் தளைப்படுத்தற வெலங்கு. நீ சுதந்தரமா இருக்கலாம். உனக்கு அடுத்தடுத்து மேடையில நிறையச் சந்தர்ப்பம் வந்து பெரிய புள்ளியாகப் போற.” அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். "எனக்கு மேடையும் சுதந்தரமும் வாணாம். நீங்க என்னைக் கலியாணம் பண்ணிக்கிடணும்.” - "பண்ணிக்கிட்டாப் போச்சு. இப்பவே நீ என் மிஸஸ்ன்னு, தான் எல்லாரிட்டயும் சொல்லியிருக்கிறேன்.”

இ.பு. "சீ என்ன சீ? நான் ப்ராட் வியூஸ் உள்ளவன்.” "நீங்க ஒரு மிக மோசமான ஆளு, பெண் சாதியையே விலைக்கு விக்கிற கீழ்த்தரமான ஆளு. அப்ப...!"

அவன் பொறுமை மீறிக் குரலைக் கடுமையாக்குகிறான். "என்னடீ என்னன்னு நினைச்சிட்டு மிஞ்சுற? நா மனசு வச்சா, உன்ன இப்ப விபசார தடைச் சட்டத்துங்கீழ விலங்கு போட்டுக் கூட்டிட்டுப் போக வச்சிடுவேன்! ஜாக்கிரத. ! என்ன?” 15 மண்வெட்டிக்குப் புதிதாகச் சீவி வைத்த கட்டையுடன் வீரபுத்திரன் பெரிய பண்ணை ஐயர் வீட்டுக்கொல்லையில் நுழைகிறான். அக்கிரகாரத்து வீடு, வாயில்புறம் வீட்டின் முன்பகுதி முழுவதும் பல பொருள் சிறப்பங்காடிக்கு விட்டிருக் கிறார்கள். பூமணி ஆற்றுக்கரை வரை நீண்ட கொல்லையில் விருத்தாசலம்பிள்ளை ஆயிரங் காய்ச்சித் தென்னை பயிரிட்டி ருக்கிறார். அதற்குத் தண்ணிர்விட்டுப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு குஞ்சிதத்துக்கு. பின் கொல்லைத் தாழ்வரையில் அவள் பொங்கித் தின்று முடங்குவதாகப் பெயர். ஆனால் அருணாசலத்தின் காபிக் கிளப் நாஸ்தாவும், குருக்கள் வீட்டிலோ,